நடிகை பூர்ணா வயிற்றில் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன் - இயக்குநர் மிஸ்கின்.. புது கதையா இருக்கே.. முழு விவரம்.

Mysskin speech devil press meet

சவரக்கத்தி ஒரு செம்ம படம். அந்த படத்தை இயக்கிய மிஷ்கினின் தம்பி ஆதித்யா இந்த “டெவில்” படத்தை இயக்கியுள்ளார். பூர்ணா, விதார்த், ஆதித் அருண் , இயக்குனர் மிஷ்கின் உள்பட பலர் இதில் நடித்துள்ளனர். H பிக்சர்ஸ் ஹரி, Touch ஸ்கிரீன் ஞானசேகர் இணைந்து இந்த டெவில் படத்தை தயாரித்துள்ளனர். முதல்முறையாக இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிப்ரவரி 2ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. அந்த நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய இயக்குனர் இசையமைப்பாளர் மிஷ்கின், “சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்தச் செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன் நான். இயக்குனர் நடிகர் பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந்த பின்னர் தான் நான் அவனை உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டேன்.

Mysskin speech devil press meet

நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர்கள், நடிகைகள் என்பேன். பூர்ணா அந்த மாதிரியான நடிகை. பூர்ணா என் வாழ்க்கையில் மிகவும் மிக மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள் என்று தெரிவித்துள்ளார்.

Video:

Related Posts

View all