நான் கடவுள் அப்போ எடுத்த போட்டோவா இது? அப்போ அந்த சம்பவம் உண்மை தான் போல. முழு விவரம்.
விருமாண்டி’ல’ல வர மாட விளக்க பாட்ட கேட்டா எனக்கு மூனு கதை கிடைக்கிது படம் எடுக்க", நான் கடவுள் எடுக்க எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது கமல் நடித்த அன்பே சிவம் தான் என்று ஒரு முறை பாலா குறிப்பிட்டுள்ளார். இந்த நன் கடவுள் படத்தை பற்றி பல கதைகள் இருக்கிறது. முதலில் நடிக்கவிருந்தவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் கடவுள்” தான் பாலாவோட பெஸ்ட் படம். இந்தியாவுல எந்த கொம்பனாலேயும் அந்த மாதிரி எடுக்க நினைச்சுக்கூட பாக்கமுடியாது.
இணையதளத்தில் இருக்கும் வதந்தி: நான் கடவுள் படம் டிலே ஆனதால அஜித் நடிக்க முடியாம டிமிக்கி குடுக்க பாத்தப்போ, பாலா & அன்புசெழியன் தலய 5 ஸ்டார் ஹோட்டல்க்கு வர வெச்சு, ஊமை குத்தா குத்தி, குடுத்த அட்வான்ஸ் வட்டியோட திருப்பி வாங்கினார்கள் என்பது.
நீங்க அஜித் மண்டையை பாலா பிடித்து கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் பார்த்திருப்பீங்க, அது அஜித் அல்ல, ஆர்யா. அஜித்தை பிடிக்காத யாரோ அந்த புகைப்படத்தை எடிட் செஞ்சு இணையத்தில் பறக்கவிட்டாங்க. அதனால் எல்லோரும் நான் கடவுள் படத்தில் அஜித் நடித்தபோது எடுத்த புகைப்படங்கள் என்று நினைத்துக்கொண்டார்கள்.
ஆனால் இருவருக்கும் பிரச்னை ஆனது உண்மை என்பது அனைவர்க்கும் தெரியும். ஏனென்றால் பாலா ஒரு பேட்டியில் கூட கூறியுள்ளார். மனக்கசப்பு ஆனது உண்மை தான் ஆனால் அஜித்தை ரூம்க்குள் கூப்பிட்டு சென்று எல்லாம் அடிக்கவில்லை அது வதந்தி என்று.