அடுத்து ஆஸ்கர் தான்.. கோல்டன் க்ளோப் விருதை தட்டி சென்ற RRR படம். இந்தியாவிற்கே பெருமை. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Naatu naatu golden glove award

நடனத்திற்கே ராஜா நடராஜனே இந்த ஆட்டத்தைக் கண்டு மெய் மறந்திருப்பார்! மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்! காணக் கண் கோடி வேண்டும். நட்பின் இலக்கணம், சிறந்த தேசபக்தி, காதல்ன்னு எல்லாவற்றையும் அருமையாகக் காட்டிய அட்டகாசமான படம். படத்த அடுத்த லெவலுக்கு கொண்டு போனதுக்கு காரணம் இவங்களோட டான்ஸ் மற்றும் பாடல்.

மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டும் அற்புதமான நடனம். Jr NTR Ram Charan இருவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள். இந்த பாட்டு வெளிய வந்தப்போவே இந்த பாட்டு நிறைய விருதுகள் வாங்கும் என்று நினைத்தோம் அதனால் இந்த கோல்டன் க்ளோப் வாங்குனது ஆச்சரியமாகவே இல்லை, ஆஸ்க்கார் வாங்கணும். இந்திய சினிமாவை பெருமை படுத்த வேண்டும்.

நாட்டுக் கூத்து கொண்டாட்ட ரகப் பாடல்: கோல்டன் குளோப் விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணி நெகிழ்ச்சி. இசையமைப்பிலார் கீரவாணி இசைஞானி இளையராஜாவின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பேசும்போது அனைவர்க்கும் நன்றி சொல்லி பிரமாதமா பேசுனாரு. கடைசியா அவருடைய மனைவிக்கு நன்றி சொன்னது எல்லாம் வேற ராகம். அந்த பாடலில் ஒர்க் பண்ணின எல்லாருடைய பெயரையும் மேண்டின் பண்ணாரு.

நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் க்ளோப் விருது பெற்றிருக்கும் கீரவாணி அவர்களுக்கும், ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அந்தப்பாடலில், வெள்ளையர்கள் தோற்கடிக்கப்படுவதாவே காட்டி இருந்தாலும்,அதையவங்க பெரிய மனதோடு ஏத்துகிட்டிருக்காங்க. வெள்ளையர்களே பெருந்தன்மையோடு நடந்துக்கறப்ப நம்ம ஆட்கள் சிறுமையோடு அந்த விருதுக்கு அப்பாடல் தகுதியில்லன்னு பொறுமறது தேவையற்றது.

வீடியோ:

Related Posts

View all