நம்ம எல்லாரையும் சிரிக்க வச்ச வடிவேலு படம் இண்ணைக்கு சிரிப்பா சிரிச்சு போச்சு. நாய் சேகர் படம் review. முழு விவரம்.
வைகைப்புயல் நீண்ட நாள் களைத்து ஒரு முழு நீள படத்தில் நடிச்சு comeback கொடுத்திருக்காரு. அந்த பாடம் தான் இந்த நாய் சேகர். இந்த படத்தின் ட்ரைலர் வந்தபோதே தெரிந்தது படம் பெரிய லாவுக்கு இருக்காது என்று, வசனங்கள் எதுவுமே மனசுல நிக்கல, காமெடிய சீன்ஸ் எதுவும் மனதில் நிக்கல, மொத்தத்தில் இப்படியொரு படத்தை வடிவேலு எதுக்கு நடித்தார் என்பதே தெரியவில்லை. அந்தளவுக்கு சுராஜ் எடுத்து வெச்சிருக்காரு.
கதை என்று பார்த்தால் பெருசா ஒண்ணுமே இல்ல. ரொம்ப நாட்களா குழந்தை இல்லாத தம்பதி கோவிலுக்கு சென்று வேண்டிக்கிறாங்க. அவங்க சென்றது பைரவர் கோவில், அங்கிருந்த சாமியார் ஒருவர் இவங்களுக்கு இந்த நை குட்டியை கொடுத்து இது உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்யும் என்று சொல்றார். பின்னர் அவர் சொன்ன மாதிரியே குழந்தை பிறக்குது, அவங்க பிஸ்னஸ் நல்லா போகுது. அப்புறம் அந்த நாய்க்கு என்ன ஆச்சு, வடிவேலுக்கு என்ன ஆச்சு என்பது தான் மீதிக்கதை.
இந்த படத்தில் இதான் பிரச்சனையே. வடிவேலு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அவரை சுற்றி நடிக்கும் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் வடிவேலு comeback கொடுக்கிறார் என்பதற்காக வடிவேலுவீ கடைசி வரை பேசி நம்மை torture செய்கிறார். கூட இருக்கும் சகா நடிகர்கள் ஸ்கோர் செய்ய வாய்ப்பே கொடுக்கவில்லை. வடிவேலுவை பழைய மாதிரி கொண்டு வரணும் என்ற இயக்குனரின் நோக்கம் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது.
ஒரு நல்ல கதையை உருவாக்கி அதில் வடிவேலுவை நடிக்க வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ. படத்தில் ஒரே savior யார் என்றால் அது ஆனந்தராஜ் தான். அவர் வரும் காட்சிகள் மட்டும் நமக்கு அங்கங்கே சிரிப்பை வரவழைக்கிறது, மற்றபடி படத்தில் ஒண்ணுமே இல்லை. இன்னொரு ப்ளஸ் சதொச நாராயணின் இசை, பாடல்கள் அருமை. அடுத்து மாமன்னன் படத்துக்கு வெயிட் பண்ணுவோம். மாரி செல்வராஜ் படம் என்பதால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம்.
Rating 2.25/5