அவள் விகடன் விருது வழங்கும் விழாவிற்கு அசத்தலாக வந்திறங்கிய நட்சத்திரா கிளிக்ஸ் வைரல்.
அவள் விகடன் விருது வழங்கும் விழாவிற்கு அசத்தலாக வந்திறங்கிய நட்சத்திரா. ஹோஸ்ட் செய்ய வந்தாரா இல்லை விருது வாங்க வந்தாரா என குழம்பிய விழா கமிட்டி மாடிலிங் துறையிலிருந்து சின்னைத்திரைக்கு வந்தவர் நட்சத்திரா நாகேஷ். அவர் கதாநாயகியாக நடித்துவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” தொடர் டி.ஆர்.பியில் முதல் இடத்தில் இருக்கிறது. அதில் அவர் ஏற்று நடிக்கும் சரஸ்வதி கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அந்த சீரியலுக்காக நட்சத்திராவும் அதில் கதாநாயகனாக நடிக்கும் தீபக்கும் சேர்ந்து மோஸ்ட் பாப்புலர் ஜோடி என்ற அவார்டை விஜய் டெலிவிஷன் அவார்டில் வாங்கினர்.
அதுத்தவிற சன் டிவியிலும் ஒரு சில தொடர்கள் நடித்திருக்கிறார் நட்சத்திரா. சின்.டிவி யில் டி.ஆர்.பி யில் முதலிடத்தில் இருந்த நாயகி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் இணைந்து நடித்த குறும்படத்தில் இடம்பெறும் “கண்ணவீசி” பாடல் இணையதளம் முழுக்க மிக பிரபலம்.
சமீபத்தில் திருமணம் செய்து கொண்டவர் தனது ஓணம் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். பிஸ்தா நிற லெகங்கா உடையில் தகதகவென ஜொலிக்கும் நட்சத்திராவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் மட்டுமல்லாது தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்
திருமணத்திற்கு பின் லைட்டாக வெயிட் போட்ட படி இருக்கும் நட்சத்திர தற்போது மேலும் அழகாக காட்சியளிக்கிறார்.
அவரது சமீபத்திய புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது. அவள் விகடனின் பெண் சாதனையாளர்களை கவுரவப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவினை தொகுத்து வழங்க வந்திருந்தார் நட்சத்திரா நாகேஷ். பார்வையாளர்கள் அனைவரின் கண்களும் அவர் மீதே இருந்தன. பட்டுப்புடவையில் சும்மா பலபலவென ஜொலித்தார்.