அவ்ளோ கஷ்டப்பட்டு ஏன் ஆடணும். ஆனா நம்ம போகஸ் ஹீரோயின் தான். லேட்டஸ்ட் செம்ம வீடியோ வைரல்.

Nallaa irummaa video viral

நடிகர் விஜய் சேதுபதியை சமீப காலமா ஒரு கேரக்டர் ரோலில். வில்லன் ரோலில் மட்டும் பார்த்துட்டு திடீர்னு அவர் ஒரு படம் ஹீரோவா நடிச்சிருக்கார் என்றதும் ஆச்சர்யமாக இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு விஜய் சேதுபதி மற்ற படங்களில் நடிக்காமல் அவரும் ஹீரோ என்று நினைத்து அவருடைய படங்கள் மட்டும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்களின் வேண்டுதல். காரணம் சிவகார்த்திகேயன் Vs விஜய் சேதுபதி தான் போட்டியாக இருந்தது முன்னாடி, ஆனால் விஜய் சேதுபதி அவரோட ரூட்டை மாத்திக்கிட்டார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நிறைய படங்கள், அதுமட்டுமில்லாமல் வெப் சீரிஸ் என்று நிறைய கைவசம் இருக்கிறது. இவரை சமீப காலமாய் வில்லனாகவே பார்த்துவிட்டு ஹீரோவா கனெக்ட் ஆக மாட்டிங்குது. அவரு வேற வில்லனா ஹீரோவை விட மிரட்டி வெச்சிடுவாரு. மாஸ்டர் படத்திலும் சரி, விக்ரம் படத்திலும் சரி அப்படியொரு பாடி லாங்குவேஜ். விக்ரம் இன்டெர்வல் சீனில் கமலை விட அதிகமா ஸ்கோர் பண்ணினது விஜய் சேதுபதி தான்.

இப்போது இவர் நடிக்கும் DSP படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுவது போல் தெரிகிறது. விஜய் சேதுபதி கொஞ்சம் பிட்டாகவும் இருக்க ட்ரை பண்ண வேண்டும். இவர் மாதிரி நடிகர் எல்லாம் நமக்கு கிடைப்பது வரம். சரியாக யூஸ் பண்ணிக்கோங்க தலைவரே. இந்த டிஸ்பி படத்தை இயக்கியவர் பின்ராம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நம்மை சிரிக்கவைத்தவர்.

இந்த முறை கொஞ்சம் ஆக்ஷனிற்றி பண்ணிருக்காரு. அனுகீர்த்தி வாஸ் என்ற பெண் கதாநாயகியா அறிமுகம் ஆகியிருக்காங்க. இந்த படத்தில் ஷிவானி முக்கிய ரோல் பண்ணிருக்காங்க அதுவும் போலீசா. அவ்வளவு ஹாட் போலி எங்கயும் இருக்கமாட்டாங்க. இமான் தான் இந்த படத்துக்கு இசை. இதுபோன்ற படங்களில் அவர் புகுந்து விளையாடிவிடுவார். இதை மட்டும் விடுவாரா என்ன.

நல்லா இரும்மா….😘 ரொம்ப நல்லா இரும்மா….😍 பொன்னோடும் பொட்டோடும் நல்லா இரும்மா……😇😇

இந்த வரிகள் பிடித்தவர்கள் இந்த பாட்டை கிளிக் செய்து பாருங்கள். நல்லா இருக்குது. 😎

வீடியோ:

Related Posts

View all