யாரிது நம்ம நந்திதாவா என யோசிக்கும் அளவிற்கு செம்ம ஸ்டைலிஷான அவுட்பிட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் அம்மணி.
ஸ்வேதா பள்ளியில் படிக்கும்போதே உதயா மியூசிக்கில் வி.ஜே.யாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான நந்தா லவ்ஸ் நந்திதாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நந்திதா என்று பெயரிடப்பட்டது, பின்னர் அதை அவர் தனது திரைப் பெயராக ஏற்றுக்கொண்டார். பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
அதன்பிறகு எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு என் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் மான்யம் கிருஷ்ணா மற்றும் நந்திதா ஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஓடிடியில் வெளிவர தயாராகியிருக்கும் திரைப்படம் ஜெட்டி. போன வருடமே டிரெய்லர் வெளியாகியிருந்தது. அத்திரைப்படத்தின் ப்ரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதற்கு பிங்க் நிற புடவையில் கவர்ச்சியாக வந்திருந்த நந்திதா ஸ்வேதாவை ரசிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல யார் கரைத்தார்களோ தெரியவில்லை நந்திதாவின் ஆடை குறைந்துள்ளது. முழு நேர கவர்ச்சிக் கன்னியாக மாறத் தயாராகி விட்டார் போலும்.. புகைப்படங்கள் எல்லாம் பட்டாசாக உள்ளது.
வாங்கம்மா வாங்க.. நீங்களும் வந்து கவர்ச்சி ஜோதில ஐக்கியமாகுங்க என்று அழைக்காதது ஒன்று தான் பாக்கி.. ஆக, அதே தான்…
நந்திதாவை மட்டும் விட்டு வைக்குமா அந்த செவுரு… நந்திதாவும் கவர்ச்சி கோதாவில் இறங்கி கலக்கி வருகிறார்.