பெட்ரூம் சீன் போல தனுஷ் கூட.. இந்துஜாக்கு நல்லா சொல்லி கொடுக்குறார் செல்வா.. நானே வருவேன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நாளை ரிலீஸ் ஆக இருக்கும் நானே வருவேன் படத்திலிருந்து பிஞ்சு பிஞ்சு மழை வீடியோ சாங் ஒன்று ரிலீசாகி இணையத்தில் வைரல். செல்வராகவன், தனுஷ், யுவன் சேரும்போது எல்லாம் இசையில் ஒரு மேஜிக் நடக்கும், அது இந்த படத்திலும் நடந்து இருக்கிறது. யுவனை பார்மில் இல்லை இல்லை என்று கூறுகின்றனர், ஆனால் செம்மையா ஒரு பாட்டு போடு கொடுத்திருக்காரு.
மனதை வருடும் பாடல். கண்களில் புகுந்து காதினில் நுழைந்து இதயத்தை வருடும் இசையில் தனித்துவம் மிக்கவும் என்னும் நம் Yuvan மட்டும் தான்.
இது போன்ற பாடல்களும் படத்தில் இருக்கு. இரண்டு தனுஷ் வேற, இருவருக்கும் தனி தனி குடும்பம் போல காட்றாங்க, இரண்டு பேரும் அடிச்சுக்கறாங்க ஒரு சில காட்சிகளில். இந்த படம் நமக்கு உலகநாயகன் களமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தை நினைவு படுத்துகிறது. அந்த படத்திலும் கதாபாத்திரங்கள், கதையின் மையக்கரு போன்றவை ஒன்று தான்.
அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரித்தவரும் கலைப்புலி எஸ்.தாணு தான். பொன்னியின் செல்வன் படத்துடன் தைரியமாக விடுகிறார்கள் என்றால் கன்டென்ட் இல்லாம கண்டிப்பா இருக்காது. அதுவும் தாணு சொல்வதைக்கேட்டால் படம் வேற லெவேலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஒரே விஷயம் இந்த படத்துக்காக தனுஷ் எங்கயும் ப்ரோமோஷன் செய்ய சென்றதாக தெரியவில்லை.
திருச்சிற்றம்பலம் படம் மாதிரி படத்துக்கு பெரிய hype இல்லை, நல்ல இருக்கும் பட்சத்தில் ரசிகர்கள் டிக்கெட் புக் செய்வர். ஆனால் இந்த வீக்கெண்ட் முடியும்வரை பொன்னியின் செல்வன் தான்.
Video: