நானே வருவேன்- என்னடா படம் இது? கலைப்புலி எஸ்.தாணு சொன்னது நடக்கபோகுது. முழு விவரம்.
என்னடா தனுஷ் இது மட்டும் பண்ணலியே அப்டின்னு நெனச்சுட்டு இருந்த நமக்கு, அட இதையும் பண்ணிட்டா போகுது என்று அசால்ட்டா இந்த genre எடுத்து பண்ணிருக்காரு மனுஷன். அது என்ன genre அப்டின்னு நாங்க சொல்ல விரும்பல ஏனென்றால் அது ரசிகர்களோடு எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைத்து விட்டுடும்.
முதல் பாதி முதல் 15 நிமிடத்துக்கு பிறகு தான் ஸ்டார்ட் ஆகுது. என்னதான் ஒரு revenge கதையாக இருந்தாலும் இது கண்டிப்பா புது செல்வராகவன் மாதிரி இருந்தது. முதல் பாதியோட இன்டெர்வல் பிளாக்ல தான் அந்த நெகடிவ் தனுஷ் அதாவது கதிரோட இன்றோ வருது. அப்போ போட்டிருப்பாரு பாருங்க யுவன் ஒரு BGM, கண்டிப்பா திரையரங்கில் விசில் சத்தம் பறக்கும். ஏண்டா இவரையா பார்ம் அவுட் அப்டின்னு சொன்னிங்க என்று தோணுச்சு.
இரண்டாம் பாதி முதல் பாதியை விட கொஞ்சம் ஸ்லோவா தான் இருந்துச்சு.எதனால் ஸ்லோ என்றால் முதல் பாதி அவ்வளவு வித்தியாசமாகவும், தனுஷ் நடிப்பு நேர்த்தியாக இருந்தது. அந்த பிரபு கதாபாத்திரத்திற்காக அவர் underplay பண்ணினது எல்லாம் வேற ரகம்.
இது போன்ற ஒரு மிரட்டலான வில்லனை தமிழ் சினிமாவில் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. தனுஷ் பின்னிட்டாரு. இரண்டு கதாபாத்திரம். இரண்டுமே வேற வேற மாதிரி பாடி language. அங்கு தான் தனுஷ் மீண்டும் ஒரு முறை நடிகரா ஜெயிக்கிறார். 2ம் பாதியில் சொல்ல அவ்வளவு குறைகள் இருந்தாலும், இந்த படத்தை இப்படி தான் முடிக்கமுடியும் என்ற ஒன்று இருக்கிறது. அதில் எந்த தேய்வும் இல்லாமல் சூப்பரா முடிச்சிருக்காரு செல்வா.
பழைய யுவன் திரும்ப கிடைச்சுட்டாரு, ஆனா பாடல்கள் கொஞ்சம் சுமார் தான். ஆனால் பின்னணி இசை மிரட்டல். எல்லா துறையும் சரியாக வெளியே செய்தால் தான் நல்ல படத்தை கொடுக்க முடியும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி இருக்கிறது.
கண்டிப்பா திரையரங்கில் பாருங்க, disappointment ஆக மாட்டீங்க.
ரேட்டிங்: 3/5