19-ஆம் நூற்றாண்டில் தோள் சீலை அணிந்து கொள்வதற்கு முலக்கரம்(முலை வரி) என்ற வரியை வசூலிக்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Nangeli latest video viral

19-ஆம் நூற்றாண்டில் தோள் சீலை அணிந்து கொள்வதற்கு முலக்கரம்(முலை வரி) என்ற வரியை வசூலிக்க வந்த நாயர்களிடம் இன்றைய கேராளாவின் சேர்த்தலா என்ற ஊரில்,தன் இரண்டு மார்பகத்தையும் அறுத்து கொடுத்து உயிர் விட்ட நங்கவேலி எனும் ஈழவ குல வீர மங்கை பற்றிய தொகுப்பு இது. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் இன்றைய கேரளாவின், மலபாரில் உள்ள இரண்டு மாவட்டங்கள் தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் அநேக பகுதிகளையும் உள்ளடக்கியது.

இங்கு அரசர்கள்,நாயர்கள்,நம்பூதிரிகள் தவிர்த்த மற்ற அனைத்து சாதியினரும் தீண்டப்படாதவர்கள்பார்க்க கூடாதவர்கள்(Unseeable).

Nangeli latest video viral

அரசர்கள்,நாயர்கள்,தவிர மற்ற சாதியினர் மீசை தாடி வைத்துக்கொள்ளக்கூடாதுசெருப்பு அணியக் கூடாது.குடை பிடித்துச் செல்லக்கூடாது. மீசை தாடி வைக்க தனியாக வரி செலுத்த வேண்டும். பெண்கள் திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும்.மேலாடை அணிந்து கொள்ள முலக்கரம் எனும் முலை வரி செலுத்த வேண்டும்.

94 வயசு நம்பூதிரி பார்ப்பான், ஒரு நாயர் ஜாதி பெண் மீது ஆசை பட்டால், அவளை படுக்க அனுப்ப வேண்டும். இது கதையல்ல. வரலாற்றின் கரை படிந்த பக்கங்களின் வரலாறு. வரி செலுத்தினாலும் பார்ப்பன நம்பூதிரிகள் எதிரில் வரும் பொழுது தோள் சீலையை விலக்கி மார்பகத்தைக் காட்ட வேண்டும்.

இதனை எதிர்த்துப் போராடும் நங்கெலி தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியுற, இறுதியாக தனது இரு மார்பகங்களை அறுத்து எறிந்து விடுகிறாள். இது மன்னருக்கு தெரிந்தால் சிக்கல் என்பதால் ஆதிக்க ஜாதி அவளை எரிக்கிறது. அவளுக்கு மூட்டிய சிதையில் தானும் நெருப்பில் குதித்து உயிர்நீத்தான் அவள் கணவன்.

நன்றி @keerthanaram142, இந்த கன்டென்ட் எழுதியதற்கு.

வீடியோ:

Related Posts

View all