எங்க படம் ஓடினாலும் அங்க இவரு தான் ஹீரோ.. தெறிக்க விட்ட எஸ்.ஜே.சூர்யா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Nani 31 video viral

இப்போ தமிழ் சினிமா நடிகர்களில் சிறந்த நடிப்பை யார் வெளிப்படுத்துவது என்ற லிஸ்ட் எடுத்துப்பார்த்தால் கண்டிப்பா அதுல எஸ்.ஜே.சூர்யா இருப்பாரு. சும்மா மிரட்டி விடுவாரு அவரு எந்த படத்தில் நடிச்சாலும். அவரோட தனித்துவம் தான் அவரோட பலம், ரொம்ப humble ஆன ஒரு மனிதன். பல இடங்களில் அதை நிரூபிச்சிருக்காரு.

தற்போது இவர் தெலுங்கில் ஒரு படம் பண்ணிருக்காரு நானி கூட. இருவருமே பயங்கரமா நடிப்பாங்க. அந்த screen ப்ரெசென்ஸ் என்பது இருவருக்குமே வேற மாதிரி இருக்கும். இதில் யார் போட்டி போட்டு ஜெயிக்கபோறாங்க என்பதில் இருக்கிறது ஆர்வம். இப்போ எல்லாரும் நெகட்டிவ் கதாபாத்திரங்களை விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.

Nani 31 video viral

அதனால் இந்த படத்திலும் எஸ்.ஜே.சூர்யா சம்பவம் செய்ய வாய்ப்பு இருக்கு. அதுமட்டுமில்லாமல் இது ஒரு காங்ஸ்டர் படம் என்று டீசர் பார்த்தாலே தெரியுது. இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் SJ சூர்யா. பிரியங்கா அருள் மோகன் தான் படத்தின் நாயகி. இன்று நானியின் பிறந்தநாள், அதனால் இந்த படத்தின் கிலிம்ப்ஸ் ரிலீஸ் பண்ணிருக்காங்க.

ரொம்ப மிரட்டலா இருக்கு. இசை அள்ளுது. பில்ட் அப் ஷாட்ஸ் எல்லாம் வேற மாதிரி இருக்கு. கண்டிப்பா பெரிய ஹிட் அடிக்கும் என்று நினைக்கிறோம்.

வீடியோ:

Related Posts

View all