ஆளே வித்தியாசமா இருக்காரு. சுருதி தான் ஹீரோயின்னா. எதிர்பார்க்கவே இல்ல இப்படி. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சகோதரர் சசிகுமார், இயக்குநர் சரவணன் இணையும் #நந்தன் #Nandhan படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ வெளியிடுவதில் மகிழ்கிறேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள் என்று முதல் பார்வையை ரிலீஸ் செய்து படக்குழுவினரை உதய் வாழ்த்தியுள்ளார். அதற்கு பதிலாக, நன்றி உடன்பிறப்பே… #நந்தன் படம் மீதான நம்பிக்கையை உங்களின் பதிவு மிகுதியாக்கி இருக்கிறது. படக்குழு சார்பாக மிக்க நன்றி. #நந்தன் வெல்வான் என்று சசிகுமார் ரிப்ளை செய்துள்ளார்.
அருமையான கதை, அட்டகாசமான திரைப்படமாக அமையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துகள் அண்ணன் சசிகுமார், அண்ணன் சரவணன் மற்றும் #நந்தன் படக்குழுவினர் என்று நடிகர் சூரி ட்வீட் செய்துள்ளார்.
கொண்டாட்டமும் குலை அறுப்பும்தான் #நந்தன் படத்தின் கதை. அட்டைப்படம் கொடுத்து அங்கீகரித்த விகடனுக்கு நன்றி. எளிய மனிதர்களின் ஆத்மார்த்த வாழ்வு, நிச்சயம் உங்களை ஈர்க்கும். உருமாறிய சசிகுமார் சாருக்கு பெரிய பெயர் கிடைக்கும். எல்லோருக்கும் நன்றி. #Nandhan என்று இயக்குனர் கொஞ்சம் எமோஷனல் ஆகா ட்வீட் செய்துள்ளார். நிறைய அரசியல் பிரபலங்கள் ட்வீட் செய்வதால், இதுவும் கர்ணன் போல உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்படும் கதை என்று நினைக்கிறோம்.
“இது நந்தனின் கதை இல்லை.. #நந்தன்களின் கதை!” என்று விகடன் அட்டைப்படத்தில் tagline உடன் வெளியிட்டிருக்காங்க. கண்டிப்பா யாரோ ஒருதரால் நந்தன் பாதிக்கப்படுகிறார் அதை வெளிக்கொண்டுவரும் படமா இருக்கும் என்று நம்புகிறோம். சசிகுமார் நடிப்பில் புதிய பரிமாணம். பல விருதுகளை வெல்வார் என்று நினைக்கிறோம்.