சோழர்கள் கதை வந்துவிட்டது.. இப்போது நந்திவர்மன் பல்லவ மன்னனின் கதை.. கொல மாசு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழரின் பாரம்பரிய பெருமை சொல்லுவோம். பல்லவ மன்னர் மன்னன் மாமல்லை வேந்தர் நந்தி வர்மன் புகழ் எட்டுத்திக்கும் இந்த படம் மூலம் பரவட்டும்.
‘ஒருவனுடைய வரலாற்றை அழிக்கனும்னா முதலில் அவனின் அடையாளத்தை அழிக்கனும்’ என்று ஒரு வசனம் வருகிறது. அது எவ்வளவு உண்மை. தமிழர்களின் வீரமும், வரலாறும் பறைசாற்றட்டும் பாரெங்கும். இதை பற்றி எழுதும்போது நந்திவர்மனை பற்றி எங்களுக்கு கிடைத்த செய்தியை பகிர்கிறோம். கொஞ்சம் உங்களுக்கும் படம் பார்க்கும் போது relate பண்ணிக்கலாம்.
ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனின் தந்தைக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு நான்கு மகன்கள். ஆனால், அவர்களுக்குப் பட்டம் சூட்டாமல் இரண்டாம் மனைவியான ஆசை நாயகிக்குப் பிறந்த நந்திவர்மனுக்கு ஆட்சியைக் கொடுத்தான் அரசன்.
பட்டத்தரசியின் மகன்கள் நால்வரும் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிடத் திட்டம் தீட்டினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் முயன்றனர். ஒருவன் மந்திரம் கற்றுக் கொண்டான். இன்னொருவன் போர் முறைகளைக் கற்றுக் கொண்டான். மூன்றாமவன் தந்திர உத்திகளைக் கற்றான். நான்காம் மகன் தமிழ் கற்றுப்புலவன் ஆனான். புலவன் தன் தமையனாகிய நந்திவர்மன் மீது ‘அறம் வைத்து’ ஒரு நூல் பாடினான். ஒருவன் அழிய வேண்டும் என்பதற்காகத் தீய சொற்கள், தீய பொருத்தங்கள் ஆகியவற்றை அமைத்துப் பாடும் முறைக்கு ‘அறம் பாடுதல்’ எனப் பொருள். திறனுடைய புலவன் அறம் பாடினால் அது பலிக்கும் என்பது வரலாறு.
மேலும் பல்லவ மன்னர்கள் பற்றி அடுத்த கட்டுரையில் சொல்கிறோம்.
தற்போது அந்த கதை, அவர் கட்டின கோவிலை வைத்து ஒரு படம் உருவாகியுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பும் நந்தவர்மன் தான். எப்படி பொன்னியின் செல்வன் படம் சோழ வரலாற்றை சூளுரைத்ததோ, இந்த படம் பல்லவ மன்னனின் பெயரை ஓங்கி ஒலிக்க வைக்கும் என்று நம்புகிறோம்.
Video: