கடவுளின் அருளில் 14 வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை. நரேன் செம்ம குஷி. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
![Naren manju blessed with baby](/images/2022/11/25/narien-blessed-with-baby-boy-2-.jpg)
நடிகர் நரேன் நமக்கு கைதி படம் மூலம் மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்தாரு, அடுத்தடுத்து இவருக்கு ஏறுமுகம் தான். இவர் எல்லாம் இவர் செலக்ட் பனி நடிச்ச ஸ்கிரிப்ட்க்கு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனா இருந்திருக்கணும், நடுவில கொஞ்சம் மிஸ் பண்ணிட்டாரு. லோகேஷ் மீண்டும் அவரை அழைத்து வந்து அவருக்குன்னு ஒரு இடம் உருவாக்கி கொடுத்துட்டார்.
அதோடு இல்லாமல், விக்ரம் படத்திலும் இவரை நடிக்க வெச்சு மீண்டும் ஒருமுறை தமிழ் ரசிகர்களுக்கு வேற ஒரு பரிமாணத்தில் காட்டியிருக்கிறார். பிஜாய் என்ற கதாபாத்திரம் LCUல மிகவும் முக்கியமான கதாபாத்திரம். அடுத்து கைதி 2 தளபதி 67 படத்துக்கு பின் நடக்க இருக்குது, அது இவரோட கதாபாத்திரதிக்ரு ஒரு prequel-லா இருக்கும். இப்போ இவர் மீது பட்ட வெளிச்சம் நிறைய படங்களில் நடிக்க அடுத்தடுத்து பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு.
![Naren manju blessed with baby](/images/2022/11/25/narien-blessed-with-baby-boy-1-.jpg)
இப்போ சமீபத்தில் யூகி படத்தில் கூட நந்தா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி மிரட்டினார். இவரோட வீட்டில் இப்போ ஒரு மகிழ்ச்சியான விஷயம் நடந்திருக்கு. என்னவென்றால் இவருக்கு கடவுள் ஆஸியில் ஒரு மகன் பிறந்துள்ளன. கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து இவங்க வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கனவே நரேன், மஞ்சு தம்பதிக்கு தன்மையா என்ற பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண்ணுக்கு ஒரு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான்.
இதனால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் அவங்க குடும்பத்தார். பொண்ணுக்கு 14 வயது ஆச்சு இந்த நேரத்தில் உங்களுக்கு குழந்தை அவசியமா என்று கேட்டாலும் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். குளத்தை எப்போ வேண்டும் என்றாலும் பெற்றுக்கொள்ளலாம், அது அவர்களின் விருப்பம். தற்போது அவங்களை வாழ்த்துங்கள் விமர்சிக்காமல்.