கல்யாணத்துக்கு அப்பறோம் ஒல்லியா ஆயிட்டாங்க! ஆனா கவர்ச்சி கொறையில! கழுத்தில் தங்கத்தாலியுடன் நயன்தாரா ஹாட் கிளிக்ஸ்.
கழுத்தில் தங்கத்தாலியுடன் நயன்தாரா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!! மொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த விக்கி மற்றும் நயன்தாரா திருமணம் வெகு கோலாகலமாக சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற காதல் ஜோடிகளில் விக்கி நயன் ஜோடியும் ஒன்று. நயன்தாரா, கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார்.
அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையானார். இடையில் ஒரு சில மனகசப்புளால் கேரியரில் கவனம் செலுத்த முடியாமல் போகவே அவரது மார்கெட் கொஞ்சம் தோய்வடைந்தது.
அதன்பிறகு தன்னைத்தானே சரிசெய்து கொண்டு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். பலருக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தது. அதை உறுதிசெய்யும் விதத்திலேயே இருவரும் சேர்ந்து சுற்றி வந்தனர். நானும் ரௌடிதான் திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்த இவர்களது நட்பு, காதலாகி, திருமணத்தில் முடிந்தது. கழுத்தில் தாலியுடன் நயன்தாரா வெளியிட்டு வந்த புகைப்படங்கள் அதிக வைரலானது.
விக்கியின் பிறந்தநாளை கொண்டாட விக்கி மற்றும் அவரது குடும்பத்தினரை துபாய்க்கு அழைத்து சென்றிருந்தார் நயன்தாரா. பிறந்தநாள் முடிந்து வாரக்கணக்கில் ஆகியும் விக்கி வெளியிட்டு வரும் துபாய் புகைப்படங்கள் டிரெண்ட் ஆனது.
சமீபத்தில் குழந்தை பெற்றுக்கொண்டதாக விக்கி சமூக ஊடகங்களில் பதிவிட அது பெரும் சர்ச்சையானது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? எப்படி? எவ்வாறு? என்று சமூக ஊடகங்களில் பெரும் பட்டிமன்றமே நடந்தது. மௌனமாக இருந்த விக்கி பயனும் சரியான ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பித்து விட்டதாகவும் தகவல் வந்தது.
திருமணத்திற்கு பின் கழுத்தில் மஞ்சள் தாலியுடன் வலம் வந்தவர் தற்போது அதை மாற்றி தங்கத்தாலி அணிந்து வருகிறார். எங்கு சென்றாலும் எந்த உடையிலும் தாலியுடன் அவர் வருவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.