அந்த Kiss! நம்ம Mind-U வேற அங்க போகுதே! வேற மாறி Celebration போல! நயன்தாராவின் பிறந்தநாள் ஹாட் கிளிக்ஸ்.
நயன்தாராவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வரும் விக்னேஷ் சிவன். மொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த விக்கி மற்றும் நயன்தாரா திருமணம் வெகு கோலாகலமாக சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற காதல் ஜோடிகளில் விக்கி நயன் ஜோடியும் ஒன்று.
நயன்தாரா, கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையானார்.
இடையில் ஒரு சில மனகசப்புளால் கேரியரில் கவனம் செலுத்த முடியாமல் போகவே அவரது மார்கெட் கொஞ்சம் தோய்வடைந்தது.
அதன்பிறகு தன்னைத்தானே சரிசெய்து கொண்டு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். பலருக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தது. அதை உறுதிசெய்யும் விதத்திலேயே இருவரும் சேர்ந்து சுற்றி வந்தனர். நானும் ரௌடிதான் திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்த இவர்களது நட்பு, காதலாகி, திருமணத்தில் முடிந்தது. கழுத்தில் தாலியுடன் நயன்தாரா வெளியிட்டு வந்த புகைப்படங்கள் அதிக வைரலானது. சமீபத்தில் குழந்தை பெற்றுக்
கொண்டதாக விக்கி சமூக ஊடகங்களில் பதிவிட அது பெரும் சர்ச்சையானது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? எப்படி? எவ்வாறு? என்று சமூக ஊடகங்களில் பெரும் பட்டிமன்றமே நடந்தது. மௌனமாக இருந்த விக்கி பயனும் சரியான ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பித்து விட்டதாகவும் தகவல் வந்தது.
நயனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து விக்கி ஒரு உருக்கமான பதிவை தனது வலைபக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பது “பல பிறந்தநாள்கள் ஒன்றாக கொண்டாடி இருந்தாலும் இது நம் திருமணத்திற்கு பின், பெற்றோர்களான பின் வரும் முதல் பிறந்தநாள், இப்பொழுதும் உன் தைரியம் மற்றும் திறமையைக் கண்டு வியந்து நிற்கிறேன், தற்பொழுது குழந்தைகள் முத்தமிடுவதால் நீ மேக்கப் அணிவதில்லை, ஆனாலும் இதுவரை பார்க்காத பேரழகாய் உள்ளாய், இந்த பிறந்தநாள் போலவே இனி வரும் பிறந்தநாளையும் நம் குழந்தைகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார்.