இது யாரப்பா புது இறக்குமதி.. விஜய் பொண்ணா நடிக்கிறாங்களாம்.. தி கோட் லேட்டஸ்ட் அப்டேட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய படம் தி கோட், இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு ஏனென்றால் இது விஜய் நடிக்கும் கடைசி படமாக கூட இருக்கலாம். ஏனென்றால் அரசியல் வருகைக்கு பின் அவரோட இடத்தை விட்டுட்டு போகிறார், அவருக்கு அது backfire கூட ஆகலாம் ஆனால் எப்படியும் அரசியலில் சாதித்தே ஆகவேண்டும் என்ற அவரது எண்ணம் பாராட்டத்தக்கது.
உங்களுக்கு அனைவர்க்கும் தெரியும் ஒளிப்பதிவாளர் மணிகண்டன். பெரிய பெரிய படங்களுக்கு வேலை செய்துள்ளார். இராவணன், பாய்ஸ் போன்ற படங்களில் வேலை செய்துள்ளார். அவருடைய பொண்ணு அபியுக்தா மாடலிங் ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. இந்த படத்தில் இவங்க விஜய் பொண்ணா நடிக்கிறாங்க என்று சொல்லப்படுது.
விஜய் இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்களில் தோன்ற இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம். மூன்றுக்கும் மேற்பட்ட தோற்றங்களில் வருகிறார். அதில் ஒரு வயதான தோற்றத்திற்கு தான் இவங்க பொண்ணா நடிக்கிறாங்க என்று நினைக்கிறோம். இந்த படத்தில் வெங்கட் பிரபு என்ன வித்தியாசமா காட்டப்போகிறார் என்று பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்.
இவங்களுக்கு இந்த படத்துக்கு பின் செம்ம வரவேற்பு காத்திருக்கு. இப்போவே இவங்க கிட்ட தி கோட் அப்டேட் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.