ரோட்ல ஒருத்தங்க கை காட்றாங்க.. வீட்ல ஒருத்தங்களா? நித்தம் ஒரு வானம் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Nitham oru vanam trailer 1

வாழ்க்கையில் ஒரு பையன்ன்னு எடுத்துக்கிட்டா ஒரு 30 வயசுக்குள்ள எப்படியும் 3 லவ்வுக்கு மேல பண்ணி எதுவும் செட் ஆகாம வீட்ல காட்டுகிற பெண்ணை திருமணம் சேர்த்து கொண்டவங்க தான் இங்கு நிறைய. எப்படியும் அந்த காதல் ஆறாத வடுவாக அப்படியே மதில் சாகும் வரை இருக்கும். அப்படி ஒரு லவ் ஸ்டோரி தான் நித்தம் ஒரு வானம். இந்த மாதிரி கதாபாத்திரங்களுக்கு அசோக் செல்வன் கச்சிதமா பொறுத்துறாரு. இந்த படத்தில் மூணு ஹீரோயின் அபர்ணா, ரித்து, சிவத்மிகா.

ஒரு பெண் கூட ரொம்ப டீப்பான காதலில் ஆரம்பித்து திருமணத்தில் முடியும் என்று நினைத்த அந்த காதல் பாதியில் அறுந்து விழும் போது வரும் வேதனையே வேறு. அதில் இருந்த மீள பசங்களுக்கு ரொம்ப லேட் ஆகும். யாராவது அட்வைஸ் கொடுப்பாங்க, எங்கயாச்சும் போய்ட்டு வரலாம்ல என்று. அப்படி ட்ராவல் செய்யும் போது ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண் மீது காதல், அடடா நம்ம வைப்க்கு மேட்ச் ஆகுறாங்களே அப்டின்னு. அதை சொல்லலாமா வேண்டாமா, சொல்லி வேண்டாம் என்று சொல்லிவிட்டால் மனம் தாங்காது, நல்ல தோழியை இழந்தது போல இருக்கும்.

Nitham oru vanam trailer 1

இது எல்லாம் முடிந்த பின்னர் வீட்டில் பார்க்கும் பெண்ணை பார்க்க போகும்போது, அந்த பெண்ணிற்கு காதலிச்சு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில், திருமணத்திற்கு முந்தய நாள் எங்கயாச்சும் ஓடிடறாங்க. அந்த கதாபாத்திரம் தான் அபர்ணா பாலமுரளி. எல்லாம் செட் ஆகி வேலையிலும் நன்றாக அமைந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் பையனுக்கு கிடைக்கும் அடுத்த ஆதி. இது எல்லாம் சேர்ந்தது தான் இந்த படம் என்று உள்மனம் கூறுகிறது இந்த ட்ரைலரை பார்த்த பின்பு.

அசோக் செல்வன் கச்சிதமான பொருத்தம், இந்த படத்துக்கு பின் சிவாத்மிகாக்கு நிறைய வாய்ப்பு வரும், ரித்து, அபர்ணா எல்லாம் இப்போவே முன்னணி நாயகி தான். இந்த படத்துக்கு இசை நன்றாக அமைந்திருக்கிறது. இயக்குனருக்கு படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

அசோக் செல்வன் இடத்தில் எதாவது ஒரு பெண் இருந்திருந்தால் இந்த சமூகம் ஒத்துக்கொள்ளுமா?

Video:

Related Posts

View all