ஆண்ட்ரியாக்காக உயிரை கொடுக்கலாம் போல.. தீயா இருக்காங்க.. நோ என்ட்ரி மிரட்டல் வீடியோ வைரல்.
நடிகை ஆண்ட்ரியா வந்து ரொம்பவும் சூசி என்று நமக்கு தெரியும். அவங்க எதாவது ஒரு படமோ அல்லது ஒரு பாடலோ படுகிறாங்க என்றால் அதற்குமுன் பல தடவை அவங்க அதை யோசிச்சு தான் பண்ணுவாங்க. ஆனால் ஒரு விஷயம் யோசிக்காமல் பண்ணுவது எது என்றால் எங்களுக்கு தெரிஞ்சு ஸ்டண்ட் காட்சிகள் தான்.
மாஸ்டர் படத்தில் கூட தளபதி விஜயுடன் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. அதை சூப்பரா பண்ணாங்க. பெரிய ஹீரோ விஜய் அவங்களுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் ஒதுக்கி அவங்களை perform பண்ண வெச்சது எல்லாம் வேற ரகமா இருந்துச்சு. இப்போ அதே பாணியில் ஒரு முரட்டு action படம் பண்ணிருக்காங்க. அந்த படத்தோட ட்ரைலர் தான் தற்போது இணையத்துல வைரல்.
இந்த கதை ரெடி பண்ணினவுடனே கண்டிப்பா இயக்குனருக்கு ஆண்ட்ரியா தவிர வேற யாரும் கதாநாயகியா வந்திருக்கமாட்டாங்க. ஏனென்றால் முழுக்க action படம், ஆண்ட்ரியா தவிர வேறு யாரு நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரம் அவ்வளவு justify பண்ணுவாங்களா என்று சொல்ல முடியாது. அவங்களோட உடல் அமைப்புக்கு தான் சரியாக இருக்கும்.
இந்த படத்தின் கதை என்னவென்றால் நண்பர்களுடன் எல்லாரும் ட்ரெக்கிங் போறாங்க, அங்க நாடாகும் சம்பவங்கள் தான். ஒரு நாயை கண்டு ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுறாங்க என்று தெரியவில்லை. பிரதாப் போத்தன் முக்கிய ரோல் பண்ணிருக்காரு. அவர் தான் சயின்டிஸ்ட், அந்த நாயோட உடம்பில் என்னமோ இருக்கு கடிச்சா என்ன ஆகுமோ கண்டுபிடிக்கிறாரு. அப்படியே நகரும் போல கதை.
Video: