பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்து மிரண்ட பாலிவுட். கட்டிப்பிடித்த அனுராக் காஷ்யப். போட்டோஸ் வைரல்.

Pa ranjith natchathiram nagargirathu in mumbai

பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. படத்தின் ப்ரோமோஷன்ஸ் முழு வீச்சில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த படமும் இந்தியாவின் முக்கியமான மொழிகளில் டப் செய்யப்பட்டு அதே நாள் ரிலீஸ் செய்யப்படுகிறது.

Pa ranjith natchathiram nagargirathu in mumbai

நேற்று இரவு மும்பையில் இந்த படத்தின் பிரீமியர் காட்சி பாலிவூட்டின் முக்கியமானவர்களுக்கு போட்டுக்காட்டப்பட்டுள்ளது. இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அனுராக் காஷ்யப் பாலிவுட்டின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர். அவர் எடுத்த ஒவ்வொரு படங்களும் தரம். சமீபத்தில் டாப்ஸியை வைத்து இயக்கிய Dobaaraa படம் கூட நல்ல விமர்சனங்களை பெற்றது. அப்படிப்பட்ட வர, நேற்று நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு மிரண்டு போயுள்ளார்.

Pa ranjith natchathiram nagargirathu in mumbai

படம் முடிந்தவுடன் பா.ரஞ்சித்தை கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர் சென்ற வாரம் பாலிவுட்டை விட சவுத் சினிமா தரமான படங்களை எடுக்கிறது. நான் இப்போது அதை தான் பார்க்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Pa ranjith natchathiram nagargirathu in mumbai

Pa ranjith natchathiram nagargirathu in mumbai

Related Posts

View all