பா.ரஞ்சித் பட்டறையில் இருந்து அடுத்து ஒரு தரமான படம். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
பா.ரஞ்சித் இயக்குனராக மட்டும் அல்ல தயாரிப்பாளராகவும் நல்ல படங்களை நீளம் productions சார்பாக ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார்.
நீலம் தயாரிப்பில் இவர் படம் அல்லாது பரியேறும் பெருமாள், ரைட்டர், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற நல்ல படங்களையும் கொடுத்திருக்கிறார்.
அந்த வரிசையில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளான நேற்று பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் ஷான் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் பொம்மை நாயகி படத்தின் முதல் பார்வை நேற்று ரிலீஸ் ஆனது. படக்குழுவினர் யோகி பாபு வீட்டுக்கு சென்று அவர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி முதல் லூக்கையும் ரிலீஸ் செய்தனர்.
வட சென்னை, ஜெய் பீம் போன்ற படங்களில் தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்த சுபத்ராவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.