படம் ஹிட் பிளாப்லாம் பிரச்னை இல்ல.. ஆனா இந்த மனுஷன் 100 சதவீதம் கொடுப்பாரு. தங்கலான் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Pa ranjith thangalaan video viral

சமரசம் அற்று சினிமா துறையில் தேர்ச்சியும் ஞானமும் அனுபவமும் உங்களை மென்மேலும் ஒடுக்கப்பட்ட சமுகத்திற்க்காக குரலாய் தொடர பா.ரஞ்சித்தின் பிறந்தநாளான நேற்று ரசிகர்கள் வாழ்த்துமழை பொலிந்து வருகின்றனர். சினிமா துறையில் புரட்சியை மட்டும் ஏற்படுத்தும் ஒரே இயக்குநர், எளிமையான மனிதர், சேரியின் அழகை யாரும் திரையில் காட்ட முடியாத அளவுக்கு காட்டியவர். கல்வியும் வேண்டும், கல்வியுடன் சேர்த்து சமூக அரசியலும் வேண்டும் என்பதை ஆணித்தரமாக நம்புபவர்.

நெடுங்காலமாகவே தமிழ் திரையுலகில் ஒரு குறை. வெற்றிகரமான இயக்குநர்களுக்கு தொடர் வாசிப்பு இல்லை. பெரும் அறிவாளிகளுக்கு திரைக்கலையின் நுட்பம் பிடிபடவில்லை. இவை இரண்டும் இணைந்த அபூர்வம் பா. ரஞ்சித். பெரிய பட்ஜெட் கட்டாயங்களுக்கு இரையாகாமல் தப்பி விட்டால் யாரும் தொடாத உச்சம் தொடுவார்.

Pa ranjith thangalaan video viral

பெரும் வெற்றிகளை பெற்றவனின் இதயம் ஆடாது மலை மேல் உள்ள சிகரங்கள் மகுடம் சூடாது

இந்த வரிகள் சீயான் விக்ரமுக்கு கச்சிதமாக பொருந்தும். இவருக்கு சினிமா மேல் உள்ள காதலால் அந்த கதாபாத்திரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வார். அப்படி இவர் அடுத்து experiment பண்ணப்போகும் படம் தான் தங்கலான். இந்த படம் 3டியிலும் எடுக்கப்படுகிறது. KGF பகுதியை பற்றி உண்மையான சம்பவங்கள் வைத்து எடுக்கப்படும் படம். அது ரஞ்சித் எடுப்பதால் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு.

இந்த படத்தில் விக்ரம் இயக்குனர் என்ன சொன்னாலும் செய்வாரு. பா.ரஞ்சித் பிறந்தநாளான நேற்று ஒரு வீடியோ ரிலீஸ் செய்திருக்கிறது படக்குழு. அதில் மூஞ்சியில் மேக்கப் போடுவதை ரஞ்சித் பார்த்துட்டு இருப்பாரு. ஹிட்டோ, பிளப்போ சீயான் விக்ரம்க்கு பிரச்னை இல்ல, அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் கொடுத்திருவாரு. இயக்குனர்கள் ஒரு சிலர் அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் பா.ரஞ்சித் இந்த படத்தில் சம்பவம் பண்ணுவார் என்று தோன்றுகிறது.

Video:

Related Posts

View all