நல்ல ஆட்டம் இரண்டு பேரும்.. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்.. பிரியா பவானி சங்கர் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் இப்போ புது கலாச்சாரம் ஒன்று உருவாகியிருக்க்கு, புது என்று சொல்ல முடியாது ஆனால் நீண்ட நாள் கழிச்சு தூசி தட்டி எடுத்துட்டு வர்றது. அது என்னவென்றால் பழைய படங்களில் வரும் நல்ல பாடல்களை ரீமிக்ஸ் செய்வது அப்படி ருத்ரன் படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட படம் ‘பாடாத பாட்டெல்லாம் பாட வேந்தேன்’ என்ற பாடல்.
ருத்ரன் படத்தை பற்றி தெரியாதவர்களுக்கு. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோ, பிரியா பவானி சங்கர் ஹீரோயின். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம். நீண்ட நாள் கழித்து ரிலீஸ் ஆகும் லாரன்ஸ் படம் என்பதால் இந்த படகுக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த கிலிம்ப்ஸ் கூட மிரட்டியது.
பழைய பாட்டை ரீமிக்ஸ் செய்யும் போது பழைய அந்த மேடுகள் குறையாமல் இருக்க வேண்டும், நடுவில் தேவை இல்லாத இங்கிலீஸ் வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தி கெடுக்க கூடாது, நல்ல வேலை இசையமைப்பாளர் அந்த மாதிரி எல்லாம் எதுவும் ட்ரை பண்ணல. லாரன்ஸ் இந்த மாதிரி நடனம் ஆடி எவ்வளவு நாள் ஆச்சு. சும்மா மிரட்டி விட்டிருக்காரு.
லாரன்ஸ் என்றாலே டான்ஸ் தான், நடிகர், இயக்குனர் என்ற அவதாரம் எடுப்பதற்கு முன்னரே அவர் டான்ஸ் மாஸ்டரா தான் அறிமுகம் ஆனார். விஜய்யை அடுத்த லெவெலுக்கு டான்சில் அழைத்து சென்றதில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கு. திருமலை படத்தில் இரண்டு பெரும் சேர்ந்து போட்ட குத்தாட்டம் இன்னும் கண்ணுக்குளேயே இருக்கு.
Video: