அரசியல்.. பழிக்குப்பழி.. அருவி படத்துல பார்த்தது அதிதியை. செம்ம ஹாட்டா இருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நிவின் பாலி ஒரு படம் செலக்ட் பண்ணி நடிக்கிறாருன்னா தரமா தான் இருக்கும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கு. சமீபத்தில் வெளிவந்த படிவெட்டு ட்ரைலர் அதை உணர்த்துகிறது. ஒரு அரசியல்வாதியால் மண் சார்ந்த மக்களுக்கு என்னென்ன அநியாயங்கள் நடக்கிறது என்று காட்டி அதை எதிர்க்கும் ஒரு இளைஞன். இது போன்ற பல படங்கள் வந்திருக்கு. வில்லனை எதிராக ஆரம்பித்து கடைசியில் ஹீரோ வெல்வது போல பல கதிகள் நாம் பார்த்துள்ளோம்.
இந்த படத்தில் ஹீரோ அவனுடைய வாலிப வயதில் அடைந்த பிரச்சனைகள், அதற்குப்பின் அப்போது அந்த அரசியல்வாதியிடம் தோற்ற ஹீரோ, மீண்டும் தனக்கு குடும்பம் அமைந்த பிறகும் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற வெறியில் செய்வது, அதனால ஹீரோவுக்கு ஏற்படும் வலி, இழப்பு அவன் சந்திக்கும் மனிதர்கள், எதிரிகள் அனைத்தையும் பற்றி பேசுகிறது இந்த படம். இதுபோல லேயர்கள் இருந்தால் தான் இப்போது இருக்கும் மக்களுக்கு புரிகிறது. பழைய அரைச்ச மாவையே அரைத்து வந்தால் யாருக்கும் பிடிப்பதில்லை, மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.
அதனால் இந்த காலத்து நடிகர்கள் இயக்குனர்கள் மக்களின் காலை பசிக்கு தீனி போட வேண்டும். இந்த படம் நன்றாகவே போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள படத்தின் சிறப்பே இதுதான். அவர்கள் எடுக்கும் மண் சார்ந்த படங்கள் தோற்றுப்போவது அரிது. அந்த வகையில் இந்த படமும் பெரிய ப்ளாக்பஸ்டர் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 21ம் தேதி ரிலீஸ்.
இந்த படத்தில் நீண்ட நாள் கழிச்சு அதிதியை திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. செம்ம performer. தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் இவங்க நடிக வேண்டும் என்று வேண்டுகிறோம்.
Video: