யாஷிகாக்காகவே எவ்ளோ தடவை வேணாலும் பாக்கலாம் போலயே. நான் அவனில்லை ஜீவன் வேற. பாம்பாட்டம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நீண்ட நாட்களா இருந்த ஏக்கம் என்னவென்றால் தெலுங்கு சினிமா எல்லாம் பாகுபலி மாதிரி படம் எடுத்து 1000 கோடி வசூல் பண்ணிட்டு இருக்காங்க, அப்படி நம்மலால எந்த படமும் கொடுக்கமுடியவில்லை என்று. அப்படி கொஞ்ச நாட்களுக்கு முன் அந்த ஏக்கத்தை பொன்னியின் செல்வன் படம் தீர்த்து வைத்தது. அவ்வளவு பிரமாண்டமாக இல்லை என்றாலும், ரசிகர்களை திருப்தி படுத்திவிட்டார் மணிரத்னம்.
தற்போது மீண்டும் ஒரு period படம் வருகிறது. அந்த படத்தின் பெயர் பாம்பாட்டம். நான் அவனில்லை ஜீவன் கதாநாயகனாக நடிக்க, யாஷிகா, பாலிவுட் சூப்பர்ஸ்டார் மல்லிகா செராவத் முக்கிய ரோலில் நடிக்கிறார். என்னதான் இதுபோன்ற படங்களை நிறைய கோடிகள் செலவு செய்து எடுத்தாலும், முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகின்றனர். அது என்னவென்றால் கிராபிக்ஸ்.
இதுபோன்ற படங்களுக்கு கிராபிக்ஸ் ரொம்ப முக்கியம். படமே பாம்பை நம்பி இருக்கும்போது, அந்த பாம்பே காமெடியாக இருக்கிறது பார்க்க. மற்ற பீரியட் செட்டெல்லாம் நல்லா தான் போட்டிருக்காங்க. அந்த டிபார்ட்மென்ட் நல்லா உழைச்சிருக்கு என்று சொல்லலாம். ஜீவனும் ஒரு காலத்தில் நல்ல நல்ல படங்களை நடித்து வந்தார். பின்னர் எப்படி என்னாச்சு என்று தெரியவில்லை, நீண்ட நாட்களாக ஆளே காணவில்லை. இப்போது தான் நிறைய வருடங்கள் கழித்து பார்ப்பது போல இருக்கிறது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் மல்லிகாவை சுற்றி தான் கதை நகரும் போலிருக்கிறது. இந்த படத்தில் தான் யாஷிகாக்கு செம்ம கெட்டப். பார்க்க அவ்வளவு அழகா இருக்காங்க. நீங்களே பார்த்து முடிவு பண்ணுங்க. மிகப்பெரிய இடைவெளிக்குப் பின் இத்திரைப்படம் இந்த ஜீவனுக்கு ஒரு comeback ஆக அமைய வாழ்த்துகள்.
Video: