ப்பா மீண்டும் ஒரு காங்ஸ்டர் படம் பரோல். மிரட்டி விட்டிருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நிறைய காங்ஸ்டர்ஸ் படம் வந்திருக்கு, ஆனால் காங்ஸ்டர்ஸ் என்றால் இப்படி தான் இருப்பாங்களா இல்லை வேறு மாதிரி ரொம்ப பிருட்டலா இருப்பாங்களா என்ற முடிவுக்கு வரவே முடியாது. தமிழ் சினிமா பண்ற ஒரு தப்பு எவ்வளவு மிருகத்தனம் ஒருத்தனை வில்லனா காட்டினாலும் அவனுக்குள்ளும் ஒரு ஈரம் இருக்கு என்று எதாவது ஒரு காட்சியில் பதிவு செய்வாங்க. ஆனால் காங்ஸ்டர்ஸ் அப்படியா இருப்பாங்க?
ஆனால் இந்த பரோல் படம் ஒரு மாதிரியான காங்க்ஸ்டர்ஸ் படம். குடுப்பதில் பிறந்த அன்னான், தம்பி இருவருமே ரவுடிகள், அவங்களை பெட்ரா ஒரு தாயின் நிலைமை, அவங்களுக்கு ஒரு காதல், அவர்கள் சந்திக்கும் துரோகம் இது போன்ற பல விஷயங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கு.விஜய் சேதுபதி வாய்ஸில் இந்த ட்ரைலர் வந்தப்போவே நினைத்தோம் இது ஒரு மாதிரி சம்பவம் பண்ண போகும் படம் என்று.
ஒரு படத்தின் வெற்றி/தோல்வி அந்த படத்தின் கதையில் கூட இல்லை திரைக்கதைதான். காசு கொடுத்து படம் பார்க்கும் மக்களை நீங்கள் எந்தளவுக்கு என்டேர்டைன் பண்றீங்க என்பதில் இருக்கிறது வெற்றி. ஒரு சில படங்களில் கதையே இருக்காது ஆனாலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும். கதை எப்படி சொல்கிறோம் என்பதில் இருக்கிறது திறமை.
தற்போது மக்கள் கூர்ந்து கவனிப்பது ஹீரோ வில்லன் frameகளை, அதுவும் இது போன்ற படங்களுக்கு அது ரொம்ப முக்கியம். விக்ரம் வேதா படம் எல்லாம் இருவருக்கும் சந்திக்கும் போதெல்லாம் ஒரு மரண மாஸ் திகில் பார்ப்பவர்களுக்கு ஏற்படும், சுவாரிஸ்யமாக இருக்கும். அதனால் தான் அந்த படம் அவ்வளவு பெரிய வெற்றி. இந்த பத்மாவும் அந்த லிஸ்டில் சேர்ந்துவிடும் என்று நினைக்கிறோம்.
Video: