பழமையின் புதுமை.. பார்த்த நியாபகம் இல்லையோ.. விஜய் ஆண்டனி கொலை படத்தின் வீடியோ வைரல்.
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்புல ஹாலிவுட் மேக்கிங்ல உருவாகியிருக்கும் படம் தான் கொலை. இந்த படத்தை இயக்கியவர் பாலாஜி குமார். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவு படம் என்று ஒன்னு இருக்கும், இவருக்கு இந்த படம் தான் கனவு படம் போல. போஸ்டர்ல இருந்து வீடியோவரை செதுக்கிருக்காரு மனுஷன். ஹாலிவூட்டில் ஏன் எல்லா சினிமா துறையை எடுத்துக்கிட்டாலும் ஒரு டிடெக்ட்டிவ் கதை என்றாலே நினைவுக்கு வருவது ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தான். அந்த படத்தின் தாக்கம் இல்லது எந்த படமும் இதுவரை வந்திருக்காது.
இந்த படம் அதிலிருந்து சற்று மாறுபட்டுள்ளது போன்று தோன்றுகிறது. எப்படி என்றால் கதை சொல்லும் விதத்தில். ரசிகர்களுக்கு கதை புரிய வேண்டும் ஏனென்றால் முடிச்சு அவிழ அவிழ தான் திரைக்கதையின் சுவாரசியம் ரசிகர்களின் கவனத்தை வேறு எங்கும் சிதறாமல் அப்படியே படத்தை மட்டும் பாரு என்று சொல்லும்.
கண்டிப்பாக அப்படிப்பட்ட கதைக்களம் தான் இது, படமும் அப்படி தான். விஜய் ஆண்டனி ஒரு ஸ்கிரிப்ட் செலக்ட் செய்து நடிக்கிறார் என்றாலே கண்டிப்பாக அதில் எதோ ஒரு விஷயம் இருக்கும். இந்த படத்திலும் அதிலுள்ள புதுமை படத்தின் ஒவொரு போஸ்டர், வீடியோலையும் தெரியுது.
இந்த படத்தின் முதல் சிங்கிள் தான் தற்போது வெளியாகியுள்ளது. பார்த்த நியாபகம் இல்லையோ அந்த பாட்டை ரீமிக்ஸ் செஞ்சிருக்காங்க. இந்த பட்டே ஒரு பல விதமான கதைகளை சொல்லுகிறது. அதுவும் நீங்கள் அந்த பாடலில் அப்படியொரு கிளைமாக்ஸ் எதிர்பார்த்திருக்க கூட மாட்டீங்க.
Video: