நீங்களா இது! இந்த அளவுக்கு கவர்ச்சி நடிகை ஆயிட்டீங்களா? கடலுக்கு நடுவில் கவர்ச்சி ஆட்டம் போட்ட மரியான் பட நடிகை பார்வதி.
ஜாலியாக பாடல் பாடிக்கொண்டே நடுக்கடலில் வைப் செய்து வரும் பார்வதி. பார்வதி திருவோத்து என்றும் பார்வதி என்றும் அறியப்படும் நடிகை கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தார். இவர் மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
பின்பு 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், பூ படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது, மற்றும் மரியான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதிலிருந்து கவனிக்கப்படும் நடிகையானார்.
சென்னையில் ஒருநாள், பேங்களூன் டேஸ் போன்ற தமிழ் திரைப்படங்கள் ஒரு சில மலையாளம் மற்றும் கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். அத்தோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.
மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து அவர் நடித்த சார்லி திரைப்படம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது. தற்போது வெகேஷனில் இருக்கும் பார்வதி தனது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.
நடுக்கடலில் படகில் அமர்ந்துகொண்டு ஜாலியாக பாடல் பாடிக்கொண்டே வைப் செய்துவரும் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோ காட்சியை பார்க்கும் பொழுது நமக்கும் அந்த வைப் தொற்றிக்கொள்ளிறது. ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ரசித்து வருகின்றனர்.