ஓஹோ கபடி பயிற்சி எடுத்துட்டு இருக்கார் அதர்வா. ஆஷிகா சூப்பரா இருக்காங்க. பட்டத்து அரசன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

மண்வாசனை என்றும் மாறாத இயக்குநர். இவர் நிறைய படங்கள் பண்ணாதது வருத்தமாக உள்ளது. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும். கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “கில்லி & வெண்ணிலா கபடிக்குழு” போன்ற வெற்றிப்பட வரிசையில் “பட்டத்து அரசன்” இணைய வாழ்த்துக்கள். களவாணி இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா & ராஜ்கிரண் நடித்த"பட்டத்து அரசன்" படம் தணிக்கையில் “U” சான்றிதழ் பெற்றுள்ளது 2022 நவம்பர் 25 முதல் திரையங்குகளில்.
இங்க எதற்காக களவாணி பட இயக்குனர் என்று சொல்கிறோம் என்றால், ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு அடையாளம் இருக்கும்., அப்படி இவருக்கு அடையாளமே அந்த களவாணி படம் தான். தர்மதுரை (2016) படம் போல தமிழக ஊர்ப்புறத்துப் பின்புலத்தின் அழகியலைக் கூட்டாமல் குறைக்காமல் காட்டிய படங்கள் அதிகமில்லை தானே என்ற வருத்தம் பல ரசிகர்களிடம் இருக்கிறது. இந்த படம் அந்த கிராமிய அழகியல் இந்த காலத்துக்கேற்றவாறு குறையாமல் இருக்கும் என்று நம்புகிறோம்.

அதர்வா, ராஜ் கிரண் ஆகியோருடன் ஆஷிகா, ராதிகாசரத்குமார், R.K.சுரேஷ்,ஜெயபிரகாஷ், மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் இசை ஜிப்ரான். இவர்தான் துணிவு படத்தின் இசையமைப்பாளர் என்று எப்போது அறிவிப்பு வந்ததோ, அப்போது முதல் ரசிகர்கள், இவர் இசை செய்யும் படங்கள் அனைத்தையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். காரணம் இதையெல்லாம் வைத்து அவர் அந்த படத்துக்கு எப்படி போட்டிருப்பார் என்று ஜட்ஜ் செய்ய. அந்த வரிசையில் இந்த ட்ரைலரில் சும்மா மிரட்டியுள்ளார்.
ஏற்கனவே அதர்வா சண்டி வீரன் அப்டின்னு ஒரு படத்துடன் சற்குணம் அவர்களோடு இணைந்து பணியாற்றியவர் தான். அதனால் இந்த படத்தில் அவர்களுக்குள் ஒரு rapo இருக்கிறது. இந்த படத்தின் ராஜ்கிரண் இருப்பது அவ்வளவு பலம். அவர் நடந்து வரும்போது, அவரின் உடல் தோற்றத்திற்கு அவ்வளவு கம்பீரமாக இருக்கிறது. கடைசி சீனில் பார்ப்பீங்க.
Video: