இன்னும் ஜாலியா அவர் வயது பொண்ணுக கூட தான் படம் பார்த்துட்டு இருக்காரு கமல்.. விளையாட்டு பையன். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
கொஞ்ச நாளா நம்ம கேட்கும் பல விஷயங்களில் ஒரு விஷயம் என்னவென்றால் பாலிவுட் இஸ் back என்னும் வசனம் தான். யேயென்றால் கொஞ்ச நாளாகவே இவங்க சரியா படம் எடுக்காததால் பாலிவுட் ரசிகர்களே சவுத் சினிமாவை தான் விரும்பி பார்க்கின்றனர். ஏன் அங்கு பெரிய ஹிட் எல்லாம் கொடுத்த இயக்குனர்களே அப்படி தான் பேசுகின்றனர்.
அதுவும் அனுராக் காஷ்யப் எல்லாம் ரொம்ப ஓப்பனா சொல்லிட்டாரு. எப்படி இருந்த பாலிவுட் எப்படி ஆயிடுச்சு பாருங்க. ஆனால் சரியான சமயத்தில் வந்த பதான் படம் அதெல்லாம் சுக்கு நூறா உடைத்து விட்டது. படம் பெரிய அளவு இல்லையென்றாலும் ஷாருக் மற்றும் பாலிவுட் ரசிகர்களை திருப்திபடுத்திவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூல் செஞ்சிடுச்சு ரிலீஸ் ஆகி கொஞ்ச நாளிலேயே. அடுத்து ஷாருக் வேற அட்லீ கூட படம் பண்ணிட்டு இருக்காரு, அதுவும் இந்த வருடம் ரிலீஸ். அதுவும் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதத்தில் ரிலீஸ் ஆகிவிடும். அதனால் பாலிவுட் கண்டிப்பா இனி சவுத் சினிமாக்கு எல்லாம் tough கொடுக்க ஆரம்பித்துவிடும்.
பதான் படத்தை நிறைய பிரபலங்களும் பார்த்துட்டு வர்ராங்க, அந்த வரிசையில் தற்போது சேர்த்திருப்பவர் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன். அவரோட பெண் தோழிகளுடன் பார்த்திருக்கிறார். கூட ஷோபா, சுஹாசினி, ஜெய ஸ்ரீ இருந்திருக்காங்க. இந்த பதிவை ஜெயா ஸ்ரீ அவங்களோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செஞ்சிருக்காங்க. அந்த போட்டோ இணையத்தில் வைரல்.