பதான் பட ட்ரைலரை வெளியிட்ட தளபதி.. அப்படி ஒரு நட்பு ஷாருக்கான் கூட.. ஹாட் தீபிகா. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பாலிவுட் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம் ஷாருக் கானின் பதான், இந்த படத்தை தயாரிப்பாளர்கள் ப்ராப்பர் பான் இந்தியா படமாக இருக்க வேண்டும் என்று கருதி நேரம் எடுத்து எல்லா மொழிகளிலும் விட்ருக்காங்க. தமிழிலும் ட்ரைலர் இன்று ரிலீஸ் ஆகியிருக்கு. இதை வெளியிட்டவர் தளபதி விஜய். அவர் வெளியிட்டதால் என்னவோ இணையதளம் பதான்.. பதான் என்று தீப்பிடித்தது.
சரி படத்துக்கு வருவோம். இந்த படம் மூலம் தான் பாலிவுட் மீண்டும் அதன் பொலிவை பெறப்போகிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. அதற்கான எல்லா எலிமெண்ட்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. ஒரு ஹாலிவுட் action படத்தை பாலிவுட்டில் எடுத்தால் என்ன ஆகும், அப்படி ஒரு ட்ரைலரை தான் இந்த படக்குழுவினர் செதுக்கியுள்ளனர்.
இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின், பல படங்களில் ஹீரோவாக மட்டும் நடித்த ஜான் ஆபிரகாம் தான் இந்த படத்தின் வில்லன். இந்த படத்தின் மற்றொரு கதாநாயகன் யாரென்றால் இசையமைப்பாளர் தான். சும்மா தெறிக்க விட்டிருக்காரு. நான்கு வருடம் கழித்து ஷாருக் கான் படம் பெரிய திரைக்கு வருது. இந்த ட்ரைலர் அதற்கான hype நல்லா ஏத்தி விட்டிருக்கு.
இந்திய ரசிகர்கள் இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கும் படம் என்னவென்றால் அது பதான் படம் தான். IMDB ரேட்டிங்-ல் முதலிடத்தில் இருக்கிறது. இந்த வருடம் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்களில் வாரிசு, தளபதி 67, துணிவு, இந்தியன் 2 ஆகிய படங்கள் மட்டுமே இடப்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ இந்த மாசான ட்ரைலரை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Video: