ஷாருக் கான் முரட்டு comeback நாலு வருடத்திற்கு பின். ஹாட் தீபிகா. லேட்டஸ்ட் மிரட்டல் ஹாட் வீடியோ வைரல்.

Pathaan trailer video viral

2018ம் ஆண்டு வெளியான ஜீரோ படத்துக்கு பின் 4 ஆண்டுகளாக ஷாருக் எந்த படமும் நடிக்கவில்லை, அதாவது வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் வருத்தத்திற்கு உள்ளாகினர். அப்படி தானே இருக்கும். ஏனென்றால், நினைத்து பாருங்கள் நம்ம ஊரில் விஜய், அஜித் நான்கு, ஐந்து ஆண்டுகள் நடிக்காமல் இருந்தால் எப்படி இருக்கும். நினைத்து பார்த்தாலே ஒரு மாதிரி மனம் கனக்கிறது. சூப்பர்ஸ்டார்கள் எல்லாம் நம்மை பொறுத்தவரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும், நாம் ரசித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தான் மனநிலை.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் ஷாருக்க்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக போகும் படம் தான் இந்த பதான் படம். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு என்றாலே ஒரு தனி கெத்து, ஏனென்றால் முன்னர் அவ்வளவு தரமான படங்களை வழங்கியுள்ளனர். ஷாருக்கான்க்கு மட்டும் தான் ஹிந்தியில் மட்டுமல்ல தமிழ் மற்றும் மற்ற முக்கிய மொழிகளிலும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர். பேன் இந்தியா ஸ்டார் என்று இவரை சொல்லலாம், அதற்கான முழு தகுதியும் உள்ளவொரு நடிகர்.

Pathaan trailer video viral

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் இன்று வெளிவந்த பதான் ட்ரைலர் மரண மாஸ் என்றே கூறலாம். ஷாருக் ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் மாஸ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து. அதுவும் இது அவரின் comeback படம் என்பதால், வசனங்கள் எல்லாம் அதற்கு ஏற்றது போல வைத்து புல்லரிக்க வைத்திருக்கின்றனர். கூட முக்கியமான ரோலில் ஜான் ஆப்ரகாம் நடித்திருக்கிறார். தீபிகா எப்போவும் போல செம்ம ஹாட்டு. ஸ்டண்ட் வேற பண்றாங்க. மிரட்டலா இருக்கு.

இன்று ஷாருக் கானின் பிறந்தநாள். பிறந்தநாள் பரிசு ரொம்ப சிறப்பா கொடுத்திருக்காரு ரசிகர்களுக்கு. இன்று போல எப்போவும் சந்தோசமாக இருங்க. வாழ்த்துக்கள் ஷாருக்.

Video:

Related Posts

View all