AG ராவணன் என்ட்ரி.. ஆட்டம் ஆரம்பம்.. வெற்றி சத்தம் நித்தம் நித்தம்.. மிரட்டல் வீடியோ வைரல்.
பாரதம் மண்ணில், குமரி கண்டத்தில் உருவெடுத்த, கம்ப ராமாயணத்தில் வரும் பத்து தல ராவணன் எங்கள் AGR (சிலம்பரசன்) ❤🔥 AGR’ன் அரஜாகம் தொடரும். சிம்பு இறங்கி அடிச்சா என்ன ஆகும் என்பதற்கு இந்த பாத்து தல ட்ரைலர் தான் உதாரணம். பழைய பார்ம்க்கு திரும்பி விட்டார். இனிதான் ஆட்டம் ஆரம்பம் என்று தோன்றுகிறது. ப்பா அந்த swag எல்லாம் வெறித்தனமா இருக்கு.
இந்த கன்னட படத்தின் ரீ மேக் தான் இது என்பதை இங்கு பதிவு செய்கிறேன் என்று சிம்பு haters நேற்று பதிவு செஞ்சுட்டு இருந்தாங்க. அதற்கு பதிலடியாக இயக்குனரே சொல்லிட்டாரு, அவர் கூறியது, “இந்த படத்துல அந்த சிம்பு கதாபாத்திரத்தை மட்டும் எடுத்து வேற திரைக்கதை அமைத்து இருப்பதாக இயக்குனர் கூறியிருக்கிறார் என்பதை பதிவு செய்கிறேன்.”
ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணி இசை நெருப்பு பற்றிக்கொண்டு பிரம்மிக்க வைக்கிறது … அவர்தான் ஏ ஆர் ஆர்🔥சிம்பு கூட ட்வீட் பண்ணிருந்தார் இந்த டீசர் பார்த்துட்டு பாய் சம்பவம் என்று. நாங்க கூட, அது அவர் படம் சும்மா சொல்றாரு போல அப்டின்னு நினைத்தோம் ஆனால் உண்மையாகவே இது பாய் சம்பவம் தான், சும்மா மிரட்டி விட்டிருக்காரு.
இதுபோக இந்த படகில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் எல்லாம் முக்கிய ரோலில் நடிக்கிறாங்க. இந்த படம் கண்டிப்பா கெளதம்க்கு ஒரு முக்கியமான படமா இருக்கும், நீண்ட நாள் அவர் எதிர்பார்த்தது இருந்த பிரேக் இந்த படத்தில் கிடைக்கபோகுது என்பதில் சந்தேகம் இல்லை. மணல் மாபியா தான் கதை அதை எப்படி இயக்குனர் ப்ரெசென்ட் பண்ண போகிறார் என்று நினைத்து பார்த்தாலே கூஸ்பம்ப்ஸ் வருது.
Video: