வெற்றிமாறன் படம்னாலே தரமா தானே இருக்கும். உலகின் மூத்த குடிமக்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. வெறித்தனமான வீடியோ வைரல்.

Pettaikaali video viral teaser

கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி & ஆஹா தமிழ் தயாரிப்பில் R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசை மேற்பார்வையில் ல.ராஜ்குமார் எழுத்து இயக்கத்தில் திமிலோடு தமிழ் உணர்வோடு வரான் பார் பேட்டைக்காளி! யார் அந்த #பேட்டைக்காளி?

இந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. யார் அந்த பேட்டைக்காளி அப்படிங்கிற கேள்வி தான் எல்லாரிடத்திலும் கொஞ்ச நாளாக இருந்தது. கலையரசன், கிஷோர், ஷீலா ராஜ்குமார் நடிப்பில் வரும் தீபாவளியன்று ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது இந்த பேட்டைக்காளி வெப் செரிஸ். இந்த வெப் சீரிஸ் தான் ஜல்லிக்கட்டு பற்றிய முதல் பதிவு தமிழ் சினிமா வரலாற்றில்.

இந்த வெப் சீரிஸ் தயாரித்தது இயக்குனர் வெற்றிமாறன். ஆடுகளம் படத்தில் ஒரு வசனம் வரும். பேட்டைக்காரன் தயாரிப்புனாலே தரமா தானே இருக்கும் என்று. அது இப்போது உறுதியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கம் மட்டுமல்ல தயாரிப்பும் தரம் தான். கிராமத்து சார்ந்த கதை, மண் சார்ந்த கதைகளை சொல்லுவதில் வல்லவர்கள் இவங்க டீம்.

இந்த வெப் சீரிஸை இயக்கிய ல.ராஜ்குமார் கூட வெற்றிமாறன் பாட்டரி தான். அவருடைய அசிஸ்டண்டா இருந்து தான் இந்த சீரிஸை இயக்கியுள்ளார். கண்டிப்பாக இவருக்கு பெயர் சொல்லும் படைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம்மில்லை. இந்த டீசரை அந்த விசுவல்ஸ் எல்லாமே பார்த்தாலே எவ்வளவு பிரமாண்டமாக எடுத்திருப்பார் என்று தெரிகிறது.

Viral Video:

Related Posts

View all