வெற்றிமாறன் சம்பவம். வாடிவாசல் திறந்தவுடனே அதை பார்க்கும்போதே புல்லரிக்குதே. பேட்டைக்காளி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Pettaikaali video viral vetrimaaran

ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது ஒரு இனத்தின் (தமிழரின்) அடையாளம். இணையத்தில் கருத்து தெரிவிக்கும் ஒரு சிலருக்கு வேண்டுமானால் ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டாக இருக்கலாம்.ஆனால் கிராமத்து தமிழர்களின் வாழ்க்கையை ஜல்லிக்கட்டே தீர்மானிக்கின்றது.

மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அந்த மாடு மாவீரன் அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது என்பது. ஜெல்லைக்கட்டை பற்றி எழுதும்போது ஒரு சில தெரியாத விஷயங்களையும் பதிவிடலாம் என்ற நோக்கில்.

தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் பேட்டைக்காளி என்ற வெப் செரிஸ் ஆஹா தளத்தில் வரும் தீபாவளி முதல் வெளியாகிறது. இந்த சீரிஸ் முற்றிலும் ஜல்லிக்கட்டு, குறிப்பிட்ட பகுதியை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை பற்றி பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வேற லெவெலில் வைரல் ஆகியுள்ளது.

ட்ரைலர் பார்க்கும்போதே தெரிகிறது எவ்வளவு பிரமாண்டம் என்று. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு எடுத்த இந்த சீரிஸ் உலகம் முழுவதும் வாழும் அனைத்து மக்களிடம் நம் தமிழர்களின் அருமை புரிந்துகொண்டு யாரேனும் உண்டோ தமிழர்களின் பாரம்பரியம் போல் இல்லை என்று ஆச்சரியப்பட வேண்டும். வெற்றிமாறனின் இயக்கத்திற்கு முன் வெற்றிமாறனின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் வாடிவாசல்(பேட்டைக்காளி) வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Video:

Related Posts

View all