அந்த காளை எங்க சாமி, இது ஜல்லிக்கட்டு பூமி.. உடம்பு புல்லரிக்குது. பேட்டைக்காளி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஆஹா இதுவரை எடுத்த வெப் சீரிஸ்-லே இந்த சீரிஸ் தான் தரம் என்று சொல்லலாம். வெற்றிமாறன் தயாரிப்பில் உருகவாகியிருக்கும் இந்த சீரிஸ் அவரோட அசிஸ்டண்டா பணி புரிந்த ல.ராஜ்குமார் தான் இயக்கியிருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் comeback கொடுக்க வேண்டும் எண்டு நினைத்தால் இப்படி ஒரு unique சப்ஜெக்ட் எடுத்து தான் comeback கொடுக்கணும். இதே போல் தான் இயக்குனர் பிரஷாந்துக்கும் நடந்தது.
அதாவது அவருக்கு முதல் படம் ப்ரூஸ் லீ. ஜிவி.பிரகாஷ் நடிச்சிருப்பாரு. அனலை அந்த இயக்குனர் வந்து மறக்கவேண்டிய படம் அது. அவ்வளவு சிறப்பாக இல்லை, காமெடி ட்ரை பண்ணி பெரிய அளவில் அது ஒர்கவுட் ஆகவில்லை. comeback கொடுக்க ரொம்ப நாள் ஆச்சு என்றாலும் விலங்கு என்ற வெப் சீரிஸ் மூலம் செமத்தியான comeback. அது போல தான் ல.ராஜ்குமாருக்கும், இயக்குனர் வெற்றிமாறன் அசிஸ்டன்ட் என்று ப்ரோப் செய்ய வேண்டாமா, கடைசியில் மண் சார்ந்த ஒரு தொடர் பேட்டைக்காளி.
அந்த பேட்டைக்காளி தொடரின் ஒரு பாட்டு ரிலீஸ் ஆகியிருக்கு, அதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும், அந்த பாடல் வரிகள் எல்லாமே புல்லரிக்க வைக்கிறது. மண் சார்ந்த பாடலில் தார தப்பட்டை இல்லை என்றால் எப்படி, பிண்ணனி தாரா தப்பட்டை சும்மா கிழியுது. சந்தோஷ் நாராயணன் இசை என்றாலே மற்ற இசையமைப்பளார்களிடம் இருந்து சற்று வித்தியாசமானதாக இருக்கும், அதே வரிசையில் இந்த பாடலும். அவரின் குரல் இந்த பாட்டுக்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்க்கிறது.
இந்த தொடரின் முதல் எபிசோட் ஆஹா தலத்தில் தற்போது வெளியாகி சீமா வைரல். வேற லெவல் செம்ம மாசா இருக்கு. கலையரசனும், கிஷோரும் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். எப்போது அடுத்தடுத்து எபிசோடுகள் வரும் என்ற ஆவல். அந்த எபிசோடுக்கு ரேட்டிங் தரவேண்டும் என்றால், 100/100 தான் தரவேண்டும். அப்படி இருக்கிறது.
Video: