மிரட்டல் சம்பவம். இப்படி ஒருத்தன் வாழ்ந்தாண்டா அப்படிங்கிற பேரு. பேட்டைக்காளி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Pettakaali sneak peek video sneak peek

ஆஹா தளம் இதுவரை தயாரித்த வெப் சீரிஸ்லேயே ஒரு தரமான வெப் சீரிஸ் என்றால் இந்த பேட்டைகாளியை சொல்லாம். இந்த சீரிஸ் தயாரித்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரோட அசிஸ்டன்ட் ல்.ராஜ்குமார் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த சீரிஸ் பெயர் பேட்டைக்காளி என்ற வைத்தபோது இருந்தே எதோ பெருசா சம்பவம் பண்ண போறாங்கன்னு நினைச்சோம், அதே போல. ஒரு படம் அல்லது இது போன்ற சீரிஸ்க்கு ரொம்ப முக்கியமே காஸ்டிங் தான். அதை இந்த படத்தில் தரமாக போட்டுள்ளனர்.

பின்னர் நாம் பார்க்கும் ஒரு படம் மனதில் நிற்கவேண்டும் என்றால், அந்த படத்தின் வசனங்கள் தீயாக இருக்க வேண்டும். இந்த சீரிஸ்-ன் வசன்னங்களும் தீயாக இருக்கிறது. மேலும் தற்போது ரிலீசான ஸ்னீக்-பீக்ல கூட ஒரு வசனம் வருகிறது அது தான் எங்களுடைய பிக். வெற்றிமாறன் இயக்கும் படம் அல்லது தயாரிக்கும் படங்களும் இவ்வளவு சிறப்பாக இருக்கிறது. எப்போதுமே மண் சார்ந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் வெற்றிமாறன்.

Pettakaali sneak peek video sneak peek

ஏன் அவர் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் விடுதலை படமும், சூர்யாவின் வாடிவாசல் படம் கூட மண் சார்ந்த படங்கள் தான். வெற்றிமாறனால் ஜாலியாக ஒரு படம் பண்ண முடியுமா என்றால் முடியும். பொல்லாதவன் படத்தை கூட அவர் தான் எடுத்தார். அதில் முதல் பாதி அவ்வளவு நன்றாக ஜாலியாக பசங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கும். அவர் இதில் ஸ்டராங்கோ அந்த மாதிரி படங்கள் பண்ணுவதும், தயாரிப்பதும் தப்பில்லையே.

வெற்றிமாறன் டைரக்ட் செய்திருந்தால் ஒரு படம் எப்படி வந்திருக்குமோ அதேபோல் இருக்கிறது இந்த சீரிஸ். இயக்குனர் ல.ராஜ்குமார் அடுத்து தமிழ் சினிமாவின் பெரிய விஷயம். இந்த சீரிஸ்-ல் என்ன ஒரு advantage என்றால் கதையை ரொம்ப பொறுமையாக எடுத்து செல்ல்லாம்.

இரண்டு மணி நேரத்துக்குள் சொல்லிவிடவேண்டும் என்ற அவசரம் இல்லை. மேலும், ஜல்லிக்கட்டு போன்ற கதையை கையில் எடுக்கும் போது எப்படி இரண்டு மணி நேரத்தில் சொல்ல முடியும் வாய்ப்பே இல்லை. இந்த பேட்டகாளி தொடரின் மாஸ் ஸ்னீக் பீக் ஒன்று ரிலீஸ் ஹிருக்கு, அந்த வீடியோ வைரல்.

Video:

Related Posts

View all