என்னடா பொசுக்குன்னு படத்தோட நாலு நிமிடத்தை விட்டுடீங்க.. சும்மா மிரட்டுது. பிச்சைக்காரன் 2 படத்தின் வீடியோ வைரல்.
சொல்லாமலே ரோஜாக்கூட்டம் டிஷ்யூம் பூ 555 பிச்சைக்காரன் சிவப்பு மஞ்சள் பச்சை
இண்டஸ்ட்ரிக்கு வந்து 24 வருசம் ஆச்சு. ஏழே படம். ஏழு படமும் ஒன்னுக்கொன்னு சம்பந்தமில்லா கதைக்களம். பூ உச்சப்படைப்புன்னா பிச்சைக்காரன் பிளாக்பஸ்டர்.
சலீம் படம் பார்த்து வாழ்க்கையை யோசிக்கவும் எவனும் இருக்க மாட்டான். பிச்சைக்காரன் படம் பார்த்து அழுகாதவன் யாரும் இருக்க மாட்டான். விஜய் ஆண்டனியை நடிகையாகவும், இசையமைப்பாளராகவும் யாருக்கும் பிடிக்காமல் இருக்காது. இரண்டிலும் பிச்சு உத்தரக்கூடிய நபர் இவரு. இவர் இப்போ இயக்குனர் அவதாரம் பிச்சைக்காரன் பார்ட் 2 படம் மூலம். என்ன இயக்குனர் சசி இயக்கவில்லை என்பது ஒரு சின்ன வருத்தம்.
படகின் மீது எவ்வளவு confident இருந்தா படத்தின் முதல் நான்கு நிமிடத்தை ரிலீஸ் செய்வாரு விஜய் ஆண்டனி. கன்டென்ட் மீது அவருக்கு பெரிய நம்பிக்கை இருக்கு என்று நினைக்கிறோம். நீண்ட நாள் கழித்து தேவ் கில் வில்லனாக. எப்படி இருக்க போகிறதோ படம் என்று இப்போவே எதிர்பார்ப்பு கூடுது.
சிறந்த நடிகர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த இசையமைப்பாளர் ,சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த தயாரிப்பாளர் என அனைத்து திறமைகளை கொண்ட எங்கள் அண்ணன் விஜய் ஆண்டனி அவர்கள் நடித்த பிச்சைக்காரன் 2 படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். மேலும் இயக்குனர் அவதாரம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்க வாழ்த்துக்கள்.
Video: