நீங்க பார்க்க நினைக்கும் ஆண்ட்ரியா இல்ல.. இது வேற மாதிரி.. வேற மாதிரி.. பிசாசு 2 வீடியோ வைரல்.
மிஸ்கின் இயக்கிய பிசாசு 2 படம் என்ன கதைன்னே ஒரு முடிவுக்கு வர முடியல.எப்படியும் வழக்கம் போல இல்லாமல் ஒரு புதுசா தான் பேயா காட்ட போறாரு.
அவர் எப்போதும் சொல்வது போல் அந்த கதையில் ஒரு அறம் இருக்க வேண்டும் என்று. கண்டிப்பா இந்த படத்திலும் நல்ல பிளஷ்பக் சீன்ஸ் இருக்கும் போலயே.
ஆனால் முதல் பாகத்துல பேயும்-ராதா ரவியும் வெச்சு ஒரு செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த ஒரு படமாக வைத்தார். பார்த்தவர்களுக்கு கண் கலங்கியது.
இந்த படத்திலும் அது போல ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. ஏனென்றால் நேற்று வெளியான பாடல் அதை உணர்த்துகிறது. ஆண்ட்ரியா கதாபாத்திரம் அடையும் வேதனை, அழுகை எல்லாம் அப்பட்டமாக கார்த்திக் ராஜா அவர் இசை மூலம் கண் முன் நிறுத்தியுள்ளார்.
எப்போதுமே மிஸ்கின் ரிலீஸ் செய்யும் பாடல் அந்த படத்துக்கு பெரிய பூஸ்ட்டாக இருக்கும். வாழ மீனுக்கும் விளங்க மீனுக்கும் கல்யாணம் பாடலில் இருந்து சைக்கோ படத்தில் வரும் உன்ன நினைச்சு நினைச்சு உருகி போனேன் பாடல் வரை.
இந்த பாடலும் ஒரு ஸ்லொ பாய்சன்.
Video: