என்னங்கடா இப்படி திகிலை கிளப்புறீங்க.. அல்லு இல்ல.. பீசா-3 மம்மி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Pizza 3 latest video viral

இதுவரை வந்த பேய் படங்களிலேயே ரொம்ப வித்தியாசமான பேய் படம் என்றால் அது பீசா தான். இதுவரை வந்த தமிழ் படங்களில் இருக்கும் ஒரு சாயல் கூட அந்த படத்தில் இருக்காது. ரொம்ப வித்தியாசமா கதைக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்திருப்பாரு இயக்குனர். யாரு நம்ம கார்த்திக் சுப்பாராஜின் முதல் படம் தான் அது.

அதற்குப்பின் பீசா 2 படம் வந்தது. அதில் அஷோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருப்பார். அந்த படம் நன்றாக இருக்கும் ஆனால் எதிர்பார்த்த அளவு இடைல. பீசாவா பீசா 2வா என்றால் கண்டிப்பா பீசா தான். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் இருவருமே பிரிச்சு மேஞ்சிருப்பாங்க.

Pizza 3 latest video viral

தற்போது 1ஓ வருடத்திற்கு பிறகு பீசா 3 மம்மி என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் நாயகி புதுமுகம் பெயர் பவித்ரா மாரிமுத்து. நாயகன் மங்காத்தா, பொன்னியின் செல்வன் படத்தில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடித்த அஸ்வின். ரொம்ப மிரட்டலா இருக்கு ட்ரைலர். அதற்கு இசை மேலும் திகிலை கிளப்புகிறது.

படத்தில் பகல் காட்சிகள் மிகவும் கம்மி என்று நினைக்கிறோம். எல்லாமே இருட்டில் இருப்பதால் கொஞ்சம் பயமா தான் இருக்குது. ஒரு நல்ல தரமான பேய் படத்தை பகலிலும் எடுத்து எதாவது இயக்குனர் புதுமுயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். பார்க்கலாம் இந்த படம் எப்படி இருக்கப்போகிறது என்று.

Video:

Related Posts

View all