பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை சிலைக்கு கீழ் விக்ரம் சார் செம மாஸ்'ஆ இருக்காரு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ponniyin selvan 2 glimpse

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு மட்டும் அல்லாமல் சின்ன டீசர் கிலிம்ப்ஸ் சேர்ந்து ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மட்டும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் வருகின்றனர்.

ஏப்ரல் 28ம் தேதி தான் ரிலீஸ் ஆகுது என்று நாங்க ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிச்சுட்டோம் என்பதில் எங்களுக்கு பெருமை உண்டு. ஆனால் சாத்தியமா நாங்க நினைக்கல ஒரு கிலிம்ப்ஸ் வெச்சு ரிலீஸ் பண்ணுவாங்க என்று. இதுவே தீயா இருக்கு. இந்த பாகம் தான் conclusion, தரமா மாஸ் பண்ணுவாங்க என்று நினைக்கிறோம்.

Ponniyin selvan 2 glimpse

நாவலை படித்து பல வருடங்கள் ஆகிடுச்சு. அதனால் நிறைய மறந்து போச்சு. இவ்வளவு பெரிய கதையை திரையில் கொண்டு வருவது லேசுபட்ட காரியம் இல்ல.எனவே எதிர்பார்ப்பு இல்லாமல் தான் போயிருப்போம். ஆனால் படம் அருமையாக இருந்தது. எல்லாருக்குமே ரொம்பவே பிடித்த படமாக இருந்தது. அப்படிப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் வரும்போது எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும், மணிரத்னம் கண்டிப்பா justify பண்ணிடுவாரு.

வந்த லாபத்தில் பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய கல்கி அவர்களின் டிரஸ்ட்டிற்க்கு ரூபாய் ஒரு கோடியை நிதி உதவியாக வழங்கியது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகம் வந்து வெற்றியடியும்போதும் கண்டிப்பா அதாவது பண்ணுவாங்க. 1000 கோடி வசூல் பண்ணிவிடும் என்று நினைக்கிறோம். இந்த கிலிம்ப்ஸ் அவ்வளவு கூஸ்பும்ப்ஸ் கொடுக்குது.

Video:

Related Posts

View all