தேவராளன் ஆட்டம் மிக முக்கியாமான ஒரு நிகழ்வு தெறிக்க விட்ருக்காரு ரகுமான். பொன்னியின் செல்வன் வீடியோ வைரல்.
திரையரங்குகளில், தேவராளன் பாடல் தெறிக்கவிடபோகிறது, ஆவலோடு இருக்கிறேன். குறிஞ்சி நிலத்தவன், தமிழினத்தை காத்தவன் எங்கள் முப்பாட்டன் முருகா, இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் உடம்பே அப்படியே புல்லரிக்கிறது. மெய்மறந்து இசையை கேட்கிறோம். அதனால் தான் இன்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையின் அரசன்.
அதுவும் முக்கியமா அந்த 2:26 “செங்குருதி சேயோனே…” என்று ஆரம்பிக்கும் போது ஒரு வைப் கிடைக்கும் பாருங்கள், திரையரங்கில் இந்த பாடலுக்கு விசில் சத்தம் ஆட்டம் என கொண்டாட போகிறார்கள் மக்கள். வெறும் பாட்டாக கேட்கும்போதே மெய்சிலிர்க்க வைக்கிறது. திரையில் காட்சிகளோடு சேர்ந்து பார்த்தால், இந்த பாட்டு மட்டுமில்ல படத்தின் ஒவ்வொரு பாட்டும் உலகத்தரம்.
ஏ.ஆர்.ரகுமான் தான் பொன்னியின் சீக்வன் படத்துக்கு இசை என்று ஆரம்பத்தில் அறிவிப்பு வந்த போது ஒரு debate இருந்தது, அவர் எப்படி period படங்களுக்கு எல்லாம் சரியாக வருவார், பாகுபலி படத்துக்கு இசையமைத்த கீரவாணியை அணுகியிருக்கலாம் என்று பேச்சு எழுந்தது. ஆனால் இந்த ஆல்பம் தான் ரகுமானின் விஸ்வரூபம், அப்போது கமெண்ட் செய்தவர்கள் எல்லாம் இப்போது அவரின் இசை மூலம் வாயடைத்து விட்டனர்.
தமிழின் அழகு, வீரம், சக்தியை பறைசாற்றும் பாடல் இதுவே மொத்தமாக பொன்னியின் செல்வன் ஆல்பம் கம்போஸ் செய்யும்போது இசை அரக்கனாய் மாறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். கதையில் தேவராளன் ஆட்டம் மிக முக்கியாமான ஒரு நிகழ்வு, இப்போதே இது திரையில் வெறித்தனமாக இருக்கப்போகிறது என்பதை உறுதி செய்துவிட்டது.
Video: