சோழ வம்சத்தை கருவறுக்க அவர்கள் சபதம் எடுத்தனர்.. முரட்டு ப்ரோமோ.. பொன்னியின் செல்வன் வீடியோ வைரல்.
சேவூர் போர்க்களத்தில் பாண்டியர்களை போரில் வென்று வீரபாண்டியனின் தலையை வெட்டி வீழ்த்தினான். அக்கொலைக்கு பழி தீர்க்க வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் சோழ நாட்டிற்குள் ஊடுருவினர். சோழ அரச வம்சத்தை கருவறுக்க அவர்கள் சபதம் எடுத்தனர்.
ரவி தாசனாக கிஷோர் சோமன் சம்பவனாக ரியாஸ் கான் தேவாரணலனாக வினய் வரகுணனாக அர்ஜுன் சிதம்பரம்
இந்த டீசர் பார்க்கும்போது சும்மா வைட்டிங்லேயே வெறி ஆகுது. அதுவும் உலகநாயகன் குரலில், ரகுமானின் இசை கொளுத்திவிட்டுள்ளனர். அப்படி இருக்கிறது பார்ப்பதற்கு. உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. எதிர்ன்னு ஒருவரை காட்டும்பொழுது தான் அந்த படமே எவ்வளவு பெரிதாகின்றது என்பது இப்போ புரிகிறது.
60 ஆண்டிற்கும் மேலான தவத்தில் உருவான கவியம். கல்கியின் காவியத்தை தன் பாணியில் செதுக்கிய சிற்பி மணிரத்னம் சம்பவத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். என்னை போல சிலர் இன்னும் இந்த கதை படிக்கவில்லை ஆனாலும் இந்தத் திரைப்படத்தின் மேல் உள்ள ஆர்வம் அதிகமாக உள்ளது
ஒவ்வொருவரின் உழைப்பும் போற்றதக்கது மற்றும் பாராட்டதக்கது. தமிழில் இது போன்றதொரு வரலாற்றுத் திரைப்படம் கண்டிப்பாகக் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் போல் காலம் பல தாண்டி வாழும்; வெற்றி பெறும்.
வெல்வது சோழமோ, பாண்டியோ அன்றி, தமிழர் வீரமாய் இருக்கட்டும்🔥
Video: