சோழனுக்கு முன்னாடி வர்ராங்க பாண்டியர்கள்.. யாத்திசை லேட்டஸ்ட் முரட்டு ஸ்னீக் பீக் வீடியோ வைரல்.
இயக்குனர் தரணியின் இயக்கத்தில் உருவான “யாத்திசை” திரைப்படத்தை சிறப்பு திரையிடலில் காணும் வாய்ப்பு கிடைத்தது. எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் போனேன் ஆனால் படத்தை பார்த்துவிட்டு மிரண்டு போனேன்.
தமிழ் இனம், மொழி, மன்னர்கள், போர், அதிகாரம், ஒடுக்குமுறை, தேவரடியார், சடங்குகள், பலி என பல வரலாற்று விஷயங்களை இலக்கிய தரத்தோடு நேர்த்தியான periodic action திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.
பொன்னியின் செல்வன் பார்த்தபோது கூட வராத ஒருவித உணர்வு இந்த படம் பார்க்கும்போது வந்தது. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வரலாற்றுப்படமாக அமையும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை என்று பார்த்த மக்களின் கருத்து. இவ்வளவு சின்ன பட்ஜெட்டில் இவ்வளவு தரமாக ஒரு படம் எடுக்க முடியாம என்பதற்கு இந்த படம் ஒரு சான்று.
ஆதி தமிழர்களின் வாழ்வியலை இவ்வளவு நுணுக்கமாக படம் பிடித்து காட்டியது இதுவரை யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு தகவல்களும், நுணுக்களும் ஒளிந்திருக்கிறது. படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
யாருப்பா இவங்க. பொன்னியின் செல்வனை விட நல்லா இருக்கே!! கதையில சொதப்பாம இருந்தா, கண்டிப்பா ஒரு கலக்கு கலக்கும். வாழ்த்துகள் என்று மக்கள் கருத்து.
300 கோடி பட்ஜெட் இல்லாத தரம் 7கோடி பட்ஜெட் எப்படி சாத்தியமானது..!?
Video: