கனவு மெய்பட்டது - பொன்னியின் செல்வனுக்கு பின் மணிரத்னத்தின் தமிழ் பேச்சு செம்ம அழகு. வீடியோ வைரல்.
பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு பிறகு, இயக்குனர் மணிரத்னத்தின் பேட்டி இது. எப்படி இந்த படம் உருவானது துன்று ஒரு சீரிஸாக வருகிறது அவரின் காணொளிகள். இந்த படம் எடுத்ததற்கு பின் இவரின் தமிழ் உச்சரிப்பு கேட்பதற்கு மிகவும் அழகா இருக்கிறது.
மணிரத்னத்தை பற்றி ஒரு கவிதை ஒன்றை படித்தோம். அதை உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி.
எங்க இதய கோயிலில் ஒரு மௌன ராகமாய் இருக்கும் நாயகனே…. அக்னி நட்சத்திரத்திலும் கீதாஞ்சலியா அஞ்சலி செலுத்தும் தளபதியே…. ஒரே ஒரு ரோஜாவை வைத்து பம்பாய்யும் தாண்டி வெற்றி கண்டவனே திருடா அட இதய திருடா….
உன் படைபில் எங்க உயிரே அலைபாயுதே அந்த கலை தாய் உன் கன்னத்தில் முத்தமிட்டாள் ….. ஆம் இந்தியா சினிமாவில் நீ ஒரு ஆயுத எழுத்து…. பல இயக்குனர்களுக்கு நீ ஒரு குரு…. கடல் கடந்து வாழும் இந்திய ரசிகர்களையும் கவர்ந்த ராவணனே….. செக்க சிவந்த வானத்தில் பிரகாசிக்கும் பகல் நிலவே….. நீ அல்லவா வெள்ளித்திரையின் உண்மையான பொன்னியின் செல்வன் !
இனிமேல் நம் சிறப்பு மிகு சோழ பரம்பரையின் ஆதித்த கரிகாலனை விக்ரம் மூலமாகவும், குந்தவையை திரிஷா மூலமாகவும், வந்தியதேவனை கார்த்தி மூலமாகவும், அருண்மொழிவர்மனாகிய ராஜராஜ சோழனை ஜெயம் ரவி மூலமாகவும் மீண்டும் மீண்டும் காணலாம். அமரர் திரு.கல்கி அவர்கள் இவர்களை நினைத்துதான் பொன்னியின் செல்வனை படைத்திருப்பாரோ? பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்த இயக்குனர் மணிரத்தினம் அவர்களுக்கு தான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.
இதே போல் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய கதையும் நரசிம்ம பல்லவன் வரலாற்று நாவலையும் மணிரத்னம் அவர்கள் சிறப்பாக படமாக்க தாங்களை அன்புடன் வேண்டுகிறோம். தமிழக வரலாறு தாங்களை காலம் உள்ள அளவும் மறக்காது.
Video: