அருள்மொழி வர்மனின் மாஸ் என்ட்ரி.. ஆதித்த கரிகாலன் நந்தினி face off.. மணிரத்னம் சம்பவம்.. பொன்னியின் செல்வன் review.
விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் சந்திக்கும் காட்சியை தான் மக்கள் வெகுவாக எதிர்பார்த்து இருந்திருப்பார்கள்.. சீயான் விக்ரம் கண்களில் காதல்.. ஆதித்த கரிகாலனாக வாழ்ந்திருக்கிறார். ஐஸ்வர்யாவின் கண் இருக்கே அது கண்ணா இல்ல கரண்டான்னு தெரியல. வஞ்சம் கலந்த பரிதவிப்பு முகபாவனைகளை கலந்து ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கின்றனர்.
“கார்த்தியின் கண்ணை கருப்பு நிற உடையால் கட்டிக்கொண்டு திரிஷா வாள் வைத்துக் கொண்டு பேசும்போது..” இந்த காட்சியில் தான் காதல் உருகியது அதுவும் அவர் மெல்ல அருகே வந்து நின்று த்ரிஷாவின் கையை பற்றி கொண்டு எதார்த்தமாக கார்த்தி பேசும் ஒவ்வொரு வசனங்களும் குந்தவையின் முகபாவனைகளும் சிறந்த நடிப்புக்கு ஒரு சான்று.
ஜெயம் ரவி சுலபமாக ஒரு வீர இளவரசனாக நம்மை ஈர்க்கிறார். அருள்மொழி யின் பாத்திர விவரிப்புகள் புத்தகத்தில் விலாவரியாக இருக்கும். சினிமா நீளம் அத்தனை விபரங்களை அனுமதிக்காது. இருப்பினும் சிறப்பாகவே உள்ளது. சோபிதா வானதியாக, பூங்குழலியாக ஐஸ்வர்யா எல்லாருமே திரையில் பார்ப்பதற்கு அவ்வளவ்ய் அழகு, நல்ல நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் என கல்கி ஏன் தலைப்பு வைத்தார்னு புரியல. மணிரத்தனத்தின் இரு பாகங்களையும் பார்க்கையில் “அழகி நந்தினியும் அரசகுல ஆண்களும்” - படைப்பின் பெயராக இருந்திருக்கலாம்னு தோணுது போன்ற நெகட்டிவ் விமர்சனங்களும் வருது. இது முற்றிலும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் தான். கொஞ்சம் சினிமாவுக்காக நடக்காத சில விஷயங்களையும் கற்பனை கலந்து கூறியுள்ளார்.
PS2>PS1
Rating: 4/5