பொன்னியின் செல்வன் ரிவியூ.. ஜெயித்தது தமிழ் சினிமா.. நிமிர்ந்தது புலி கொடி அவ்வளவு தான்.. தமிழ் சினிமாவின் pride. முழு விவரம்.

Ponniyin selvan movie review update

இன்று தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றும் அழியாத காவியமாய் ஒரு புத்தகம் இருக்கிறது என்றால் அது பொன்னியின் செல்வன் நாவலாக தான் இருக்கும். தமிழர்களின் வரலாறு அது. இது படமாக வரப்போகிறது என்றால் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் மணி ரத்னம் இயக்குகிறார் என்றால் இன்னும் பல மடங்கு இருக்கும். இன்று அந்த காவியத்தை, கற்பனை கதாபாத்திரங்களை நேரில் சென்று பார்த்த பாக்கியம் கிடைத்தது. நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். அருண்மொழி வர்மன் குணத்திற்கு ஜெயம் ரவியை தவிர வேறு யார் கச்சிதமாக பொருந்துவார்கள். முகத்தில் அப்படியொரு அமைதி, பொறுமை.

படத்தை பற்றி ரொம்ப reveal செய்ய விரும்பல ஏனென்றால் பார்க்கும் ரசிகர்களுக்கு அது சஸ்பென்ஸ் எதுவும் இல்லாமல் போய்விடும். ஏனென்றால் இது தமிழர்களின் pride, அதை ஒவ்வொருவரும் திரையரங்கில் experience செய்ய வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். அந்த காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள் என்பதையெல்லாம் திரையில் நம் கண் முன்னால். மணிரத்னம் எப்போதுமே CG யை நம்பி படம் எடுப்பதில்லை. ஆனாலும் இந்த படத்தில் ஒரு சில கட்சகிகளுக்கு தேவைப்படுகிறது. அது இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் ஆனால் இது அவ்வளவு மோசமாக இல்லை. மிகவும் நன்றாகவே இருக்கிறது.

Ponniyin selvan movie review update

முதல் பாதி முழுவது கார்த்தி ஷோ என்று சொல்லலாம். வந்தியத்தேவன் தான் எல்லாமே. மனுஷன் வாழ்ந்திருக்காரு. இது முதல் பாகம் என்பதால் அந்த கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்ய கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது, ஆனால் கூட நமக்கு ஒரு கட்சியில் கூட போர் அடிக்கவில்லை என்பது தான் சிறப்பு. ஆதித்த கரிகாலனின் அந்த டார்க் பாஸ்ட் நடிப்பில் அப்படி ஒரு முத்திரை இந்த படத்தில். விக்ரமை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு தூக்கி நிறுத்த முடியாது. வந்தியத்தேவன் நந்தினி மற்றும் குந்தவையை சந்திக்கும்போதான வார்த்தை விளையாட்டுகள் 👌

ஐஸ்வர்யா ராய், திரிஷா எல்லாம் பெரிய திரையில் தேவதை போல இருக்கின்றனர். கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையராக வரும் சரத்குமாரின் துரோகம் அனைத்தும் முதல் பாதியில் படம் கவர் செய்கிறது. யாரையும் ரொம்ப குழப்பாமல் கதையை தெளிவாக புரிய வைக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இரண்டாம் பத்தியை பற்றி கவலையே வேண்டாம் நான் வேற லெவெலில் ப்ரெசென்ட் செய்கிறேன் என்று பீஸ்ட் மோடுக்கு மாறியுள்ளார் இயக்குனர் மணி. கடைசியா கிளைமாக்ஸ் கட்சியில் வருகிறது ஷிப் பைட். அதில் மட்டும் CG ஒர்க் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது மத்தபடி தரம்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை, ரவிவர்மாவின் கேமரா, தோட்டா தரணியின் ஆர்ட் இதையெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது. எவ்வளவு உழைப்பு போட்டிருக்கிறார்கள் என்று படத்தை பார்த்தாலே தெரிகிறது.

எடிட்டருக்கும் மிகப்பெரிய பாராட்டு. மூன்று மணி நேரத்துக்கு மேல் இழுக்காமல், crispஆக கச்சிதமாக எடிட் செய்ததற்கு.

ஏன் இன்னும் வைட்டிங். டிக்கெட் புக் பண்ணுங்க பா.

Rating: 4/5

Related Posts

View all