சோழர்களின் வரலாற்றை தமிழர்களின் பெருமையை மும்பையில் நிலைநாட்டிய சீயான் விக்ரம். சும்மா மிரட்டி விட்டிருக்காரு. வீடியோ வைரல்.
நேற்று மும்பையில் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் ஈவென்ட் நடந்தது. அங்கு வந்த வாடா இந்திய மீடியாக்கு சோழர்களின் வரலாற்றை சீயான் விக்ரம் படம் எடுத்தார். மிரண்டு போன அவர்கள் கைதட்டி உற்சாகமடைந்தனர். இந்த மாதிரி ஒரு விஷயம் என்னடா இன்னும் பொன்னியின் செல்வனுக்கு நடக்கலியே என்று நினைத்து கொண்டிருந்தோம், நேற்று நடத்தி காட்டிட்டாரு விக்ரம். வேற லெவல் அவரு.
அவரின் பேச்சு தற்போது இணையத்தில் வைரல், கண்டிப்பாக இதை தொடர்ந்து நிறைய பேர் இந்த படத்தை பார்க்க திரையரங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் காவியம் தமிழர்களுக்கு மட்டுமல்ல மொத்த இந்தியர்களும் பெருமை பட வேண்டிய ஒரு காவியம்.
தமிழர் பண்பாட்டை உருவாக்கியதில் முக்கிய பங்கு சோழர்களுக்கு உள்ளது. சோழர்களின் வரலாறு பாட நூல்களில் கூடுதலாக இடம்பெற வேண்டும் என எழுத்தாளர் ஜெயமோகன் கூட வலியுறுத்தியுள்ளார். சோழர்களின் வரலாறு மீதும் கட்டிட, சிற்பக்கலை மீதும் உங்களுக்கு காதல் இருக்குமானால் 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட (கோவை) பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்.
கதையின் அடிப்படையில் பார்த்தால் பொன்னியின் செல்வன் 100 பாகுபலிக்கு சமம். அக்கதை திரையில் வெற்றி பெறுவதும் பெறாததும் முழுக்க முழுக்க இயக்குனர் வசமே உள்ளது. கொஞ்சம் திரைக்கதையில் பிசிறு தட்டினாலும் பெரிய அளவு வசூல் பாதிக்கும். அனால் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் குறிப்பிட்ட போது படம் தரமாக வந்திருக்கிறது என்று சொல்லாமல் சொல்லினர்.
Video:
— Backup Id (@BackupId19) September 24, 2022