யாருப்பா அந்த ப்ளூ கலர் சுடிதார் அவங்களுக்காகவே திரும்ப திரும்ப பாக்கணும்னு தோணுது. பொன்னியின் செல்வன் மேக்கிங் வீடியோ வைரல்.
தமிழ் திரை உலகின் இந்த முக்கிய படத்திற்கு ஆதரவு அளியுங்கள் மக்களே… குறைகள் இல்லாத இடமே இல்லை குறைகளை தேடிக் கண்டு பட்டியலிடாமல் நிறைகளையும் கலைஞர்களின் திறமையையும் உழைப்பையும் பாராட்டி கொண்டாடுவோம்.
இப்படம் ஜெயித்தால் அது நானே ஜெயித்தது போன்ற மகிழ்ச்சியை எனக்களிக்கும்.
செப்டம்பர் 30 தமிழ் சினிமாவிற்கு முக்கியமான நாள். இன்னும் 10 நாள் தான் இருக்கிறது பொன்னியின் செல்வன் படத்துக்கு ரொம்பவே ஆவலுடன் காத்துக் கொண்டுருக்கிறோம்.
படம் பெயர் தான் பொன்னியின் செல்வன். ஆனால் படம் பார்க்க அனைவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். ஆனால் பெண்கள் பலர் கதையின் நாயகன் எங்கள் வந்தியதேவனுக்காகவே நாங்கள் படம் பார்ப்போம் என்று சமூக வலைத்தளங்களில் கூறுவதை பார்க்கிறோம்.
“சோழன் வாள் பட்டு வாழ்ந்தவர்கள் உண்டு ஆனால் சோழ நாட்டு பெண்கள் கண்கள் பட்டு வீழ்ச்சி அடையதவரே இல்லை” என்பது பரவலான கருத்து.
த்ரிஷா ஆயிரம் படம் மெகா ஹிட் கொடுத்தாலும் இனி த்ரிஷாவின் குந்தவைக்கு இணையாக வராது. எங்க பார்த்தாலும் த்ரிஷா த்ரிஷா தான். ரசிகர்கள் பலருக்கு த்ரிஷா காய்ச்சல். அடுத்தது தளபதி 67 கதாநாயகி என்று சொல்லப்படுது. அவங்களுக்கு இனி ஏறுமுகம் தான்.
ராட்சச மாமனே BTS வீடியோ வெளியாகிருக்கு, இந்த 2 நிமிட வீடியோலேயே இவ்வளவு பிரமாண்டம். கண்டிப்பாக மணிரத்னம் ஏமாற்றமாட்டார் என்று நம்புகிறோம். நீங்க இந்த படத்தை பார்த்தபின் பாகுபாலி உடன் எல்லாம் compare செய்வது தப்பு. அதனால் இது நம்ம படம், நம் வரலாறு, நம்ம தான் கொண்டாடவேண்டும். எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் படத்தை ரசிப்போம். குறை இல்லாத விஷயம் எது இந்தவுலகில் உள்ளது.
Video: