அழகின் உச்சம்.. பாடலும் நடன காட்சியும்.. குந்தவையும், வானதியின் அந்த அசைவுகள். ஹாட் வீடியோ வைரல்.
வானதியின் எதிர்க்கால மணாளன் பற்றி அறிய குடந்தை ஜோசியரைக் காண அரிசிலாற்றின் வழியாக குந்தவை, வானதி செல்லும் போது இவ்விருவருக்குமான பாடல் இது. திரையில் வரும் மற்ற பெண்கள் குழந்தையின் தோழிகளான தாரகை, வாரிணி, நிரவதி, செந்திரு, மந்தாகினி ஆகியோர்.
ஆண் மகனுக்காக ஓர் பாடல் இதுவரை வராத வரிகள் ஆணின் காதல் வீரம் வெற்றி ஆண்மகனை போற்றி பாடும் வரிகள் அருமை. இயற்கையின் சத்தங்கள் இனிமை. ARR.. மனுஷன் என்னமா இசை போட்டு இருக்காரு.. நன்று மிக நன்று.
தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஐந்து மொழிகளையும் சேர்த்து ஒரே இசையாக கொடுத்திருக்கிறார் இசைப்புயல். அதனால் தான் இவ்வளவு காலங்களாக நம்பர் 1ல் இருக்கார்.
பழுவூர் ராணி நந்தினிக்கு ஒரு பாடல் இல்லாதது தான் வருத்தம் அளிக்கிறது.மணிரத்னம் எதாவது ரசிகர்களுக்கு surprise வெச்சிருந்தா பரவாயில்லை என்று தோன்றுகிறது.
உண்மையில் பேரரசர்களை ஆட்டுவித்த எங்கள் குந்தவை பிராட்டியார் தான் சாமர்த்தியசாலி. திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Video: